ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

தலையில் பைக்கை சுமந்து செல்லும் இளைஞன்.. ரியல் பாகுபலி இவர் தான் என வியந்து பாராட்டும் நெட்டிசன்கள்.!

தலையில் பைக்கை சுமந்து செல்லும் இளைஞன்.. ரியல் பாகுபலி இவர் தான் என வியந்து பாராட்டும் நெட்டிசன்கள்.!

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

Viral Video | சுமைதூக்கும் தொழிலாளியாகப் பணிபுரியும் ஒருவர் தலையில் சுமார் 100 கிலோ எடைக்கொண்ட பைக்கை சுமந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சோசியல் மீடியாக்கள் இல்லை என்றால் கடைக்கோடியில் உள்ள திறமையுள்ள மனிதர்கள் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் வெளிச்சத்திற்கு வரமுடியாது. ஆம் குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள், ஆண்கள், வயதானவர்கள் என ஒவ்வொருவரும் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தும் பொது இடமாக உள்ளது சோசியல் மீடியாக்கள். சிலர் தங்களுக்கு தெரிந்து சில வீடியோக்களைப் பதிவிடுவார்கள். ஆனால் சிலரோ எதார்த்தமாக மற்றும் வழக்கமாக செய்யும் பணிகளைச் செய்தால் கூட சில நாள்களில் டிரெண்டிங் லிஸ்டில் வந்து விடுவார்கள். குறிப்பாக சிலர் மேற்கொள்ளும் அசாத்திய செயல்கள் மற்றும் திறமைகள் அனைத்தும் நெட்டிசன்களிடம் வைரலாவது வழக்கமான ஒன்று.

இதுப்போன்ற ஒரு வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் டிரெண்டாகி நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. டிவிட்டர் பக்கத்தில், பயனாளர் குல்சார் சஹாப் என்பவர், “இவர் தான் ரியல் சூப்பர் மேன்“ என்ற தலைப்பில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், சுமைதூக்கும் தொழிலாளியாகப் பணிபுரியும் ஒருவர் தலையில் சுமார் 100 கிலோ எடைக்கொண்ட பைக்கை சுமந்து செல்வது போன்று வீடியோ தொடங்குகிறது. என்னடா.. இப்படி தூக்க முடியுமா? என யோசிப்பதற்கு உள்ளே நடந்து சென்று மளமளவென பேருந்தின் ஏணி வழியாக டாப்பில் பைக்கை வைத்துவிடுகிறார்.

அப்போது பேருந்தின் மேல் நின்ற இருவர்கள் தலையில் வைத்திருந்த பைக்கை இறக்கி வைக்கிறார்கள். அதே சமயம் இவர் நடந்து செல்லும் போதும், பேருந்தின் படிக்கட்டில் ஏறும் போதும் யாரும் துணைக்கு வரவில்லை. ஒரு துண்டை மட்டும் பேலன்சிங்கிற்கு வைத்துக்கொண்டு அசால்டாக நடக்கிறார். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்களைஎப்புட்றா.. இப்படியெல்லாம் பண்ணுறீங்க என வாய் பிளக்க வைத்துள்ளது.

பொதுவாக சில பேருந்து நிலையங்கள் அல்லது லாரிகளில் பெரிய எடைக்கொண்ட சரக்குகளை ஏற்றும் போது கூட, கீழே இருந்து கயிறு கட்டி இழுப்பார்கள். அல்லது ஒரு 4, 5 பேர் தூக்கி செல்வார்கள். ஆனால் தனி ஒரு நபராக எவ்வித பிடிமானமும் இன்றி பைக்கை தலையில் வைத்து தூக்கி சென்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ தான் பகிரப்பட்ட சில நாள்களிலே இதுவரை டிவிட்டரில் 9 லட்சத்திற்கு அதிகமாக லைக்குகளையும், பார்வையாளர்களையும் பெற்றுள்ளது.

Also Read : ஒரே கார்ட்டூன்.. போனை தூரம் வைத்த மஹிந்திரா.. மனம் நொந்து பதிவிட்ட தொழிலதிபர்!

மேலும் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், நீங்கள் தான் தான் சூப்பர் ஹீரோ என்றும், பாகுபலியில் சிவலிங்கத்தை தோளில் சுமந்துச் செல்வது உண்மையில்ல என தெரிந்தும் வியந்து பார்த்தோம்… அதேப் போன்று தனி ஒரு நபராக தலையில் பைக்கை இந்த சுமந்து செல்வதைப் பார்க்கும் போது இவர் தான் ரியல் பாகுபலி என்றும் டிவிட்டரில் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். நிச்சயம் இவர் பாராட்டுதலுக்குரியவர் என்றும், இவரின் திறமையை அனைவரும் சேர்ந்து போற்றுவோம் எனவும் டிவிட் செய்துள்ளனர்.

இதோடு சில டிவிட்டர் பயனர்கள், இது கிராபிக்ஸா, இல்லை உண்மையா? எப்படி இப்படி? செய்ய முடியும் என்பது போன்ற கேள்விகளையும், இந்த வேலையைச் செய்வதற்கு இவர் பல ஆண்டுகள் பயிற்சியை நிச்சயம் எடுத்திருக்கக்கூடும் என்பது போன்ற கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

First published:

Tags: Tamil News, Trending, Viral Video