Home /News /trend /

எனக்கும் பலூன் கொடுங்க... காத்திருந்து பலூனை வாங்கிய நாயின் க்யூட் வீடியோ

எனக்கும் பலூன் கொடுங்க... காத்திருந்து பலூனை வாங்கிய நாயின் க்யூட் வீடியோ

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

Viral Video | சாலையில் பலூன் வியாபாரியிடம் எனக்கு ஒரு பலூன் கொடுங்கலேன் என்று காத்திருந்து வாங்கிய குஷியில் வாலை ஆட்டிக்கொண்டு வீட்டிற்குள் செல்லும் க்யூட் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
உலகில் சுவாரஸ்சியமான விஷயங்கள் எங்கு நடந்தாலும்? என்ன நடந்தாலும்? நொடியில் நம் கண்முன்னே கொண்டு வருவது சோசியல் மீடியாக்கள். அதிலும் குழந்தைகள் பேசும் மழலை மொழிகளோடு க்யூட்டான முக பாவனைகள், வித்தியாசமான விஷயங்கள் அனைத்தும் இணையத்தை குறிப்பிட்ட காலத்திற்கு ஆக்கிரமித்து லைக்குகளைத் தெறிக்கவிடும். அப்படியொரு சம்பவம் தான் தற்போது இணையத்தில் வைரலாகிறது. அப்படி என்ன தான் நடந்தது தெரியுமா.?

பொதுவாக பெரும்பாலான வீடுகளில் நாய்கள் தான் செல்லப்பிள்ளையாக வளர்வார்கள். தற்போது ராஜபாளையம், கன்னி, சிப்பிப்பாறை, கோம்பை உள்ளிட்ட நாட்டு நாய்கள் முதல் வெளிநாட்டு நாய்களை வளர்ப்பதிலும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக லாப்ரடர் ரெட்ரீவர் என்ற ஒருவகை நாய்களை வளர்ப்பதிலும் மக்கள் ஈடுபாடோடு உள்ளனர். இந்த இன நாய்களுக்கு இளம் சிறார்களுக்கும் , முதியவர்களுக்கும் ஏற்றதாய் விளையாடும் குணம் அதிகளவில் உள்ளது.

அதிலும் பார்வைக்குறையாடு உள்ளவர்களுக்கும் வழிகாட்டியாகவும் இந்நாய் விளங்குவதால் இதை வளர்ப்பவர்களுக்கு எப்போதும் செல்லமாக இருக்கும். அதிலும் கொழுக் மொழுக்குன்னு க்யூட்டாக இருக்கும் இந்த இன நாய்களை பார்த்தவுடன் அனைவருக்கும் பிடிக்கும்.இந்த லாப்ரடர் நாய் ஒன்று வளர்ப்பவர்கள் மற்றும் வீட்டிற்கு அருகாமையில் உள்ளவர்களுக்கு மட்டுமல்லாது இணையவாசிகளிடம் அன்பைப் பெற்றுள்ளது. இன்ஸ்டகிராமில் ‘naughtyworld’ என்ற இணையதள பக்கத்தில் நாயின் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அதில் லாப்ரடேர் இன நாய் சாலையில் பலூன் விற்பனையாளருக்கு அருகில் அமர்ந்து,பலூன் ஊதிக் கொண்டிருக்கும் அவரை பார்த்துக் கொண்டே இருப்பது போன்று இந்த வீடியோ தொடங்குகிறது. ஆரம்பத்தில் இவரை எதுவும் கடிக்கப்போகிறதா? ஏன் இப்படி அமைதி காத்துள்ளது என பார்ப்போரை யோசிக்க வைக்கிறது.

Also Read : வீட்டுக்குள் புகுந்த கரடி - கேக் சாப்பிட்டு, நீச்சல் குளத்தில் குளித்து குதூகலம்.! வைரல் வீடியோ

பின்னர் பலூன் உரிமையாளர் பலூனில் காற்று ஊதித் தரும் வரை வாலை ஆட்டிக்கொண்டு அமைதியாக அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். சிறிது நேரத்திலேயே மஞ்சள் வட்ட வடிவத்தில் உள்ள பலூனை வாங்கிக் கொண்டு கதவு திறந்து நடந்து செல்கிறது. பின்னர் வீட்டிற்குள் மகிழ்ச்சியாய் உள்ளே நுழைகிறது. இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகிறது. இரண்டு நாள்களுக்குள் இதுவரை சுமார் 1 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது.
மேலும் நாயின் க்யூட் செயல்கள் குறித்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “செம அழகு, யாருக்கு இந்த பலூனை நாய் வாங்கிச் சென்றிருக்கும்? நாய் உரிமையாளர்களுடன் தானே எப்போதும் வெளியில் வாக்கிங் வரும்? இப்ப யாரும் வீட்டில் இல்லையா? எனவும் கேளிக்கையுடன் கமெண்ட்ஸ்களை இணையத்தில் பதிவிட்டுவருகின்றனர்.

Also Read : திருட முற்பட்டபோது உடனடி கர்மவினைப் பயனை அனுபவித்த பெண் - வீடியோ வைரல்!

பொதுவாக இணையத்தில் விலங்குள் செய்யும் சேட்டை தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாவது போல், தற்போது லாப்ரடர் ரெட்ரீவர் நாய் ஒன்று பலூனை வாங்கிச் சென்ற வீடியோவும் சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Selvi M
First published:

Tags: Dog, Trending, Viral Video

அடுத்த செய்தி