• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • ’ஏர் இந்தியா விமான கலரில் உணவகம்’ - இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பகிர்ந்த ரத்தன் டாட்டா!

’ஏர் இந்தியா விமான கலரில் உணவகம்’ - இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பகிர்ந்த ரத்தன் டாட்டா!

ரத்தன் டாடா

ரத்தன் டாடா

ஏர் இந்தியாவுக்கான மதிப்பையும், நற்பெயரையும் மீண்டும் பெற டாடா குழுமத்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

  • Share this:
ஏர் இந்தியா விமானத்தின் நிறத்தில் டாட்டா குழுமத்துக்கு சொந்தமாக மும்பையில் இருக்கும் உணவக புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரத்தன் டாட்டா பகிர்ந்துள்ளார்.

இந்தியாவின் பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனம், அதனை தொடங்கி நடத்திய டாட்டா குழுமத்தின் கைகளுக்கே சென்றுள்ளது. பெரும் கடனில் தவித்து வந்த ஏர் இந்தியாவை விற்பனை செய்ய மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாகவே பரிசீலித்து வந்தது. முதலில் அரசின் பெரும்பான்மையான பங்குகளை விற்பனை செய்ய முன் வந்த மத்திய அரசு, பின்னர் விமான நிறுவனத்தை முழுவதுமாக தனியாரிடம் ஒப்படைப்பது என முடிவெடுத்தது.

இதன் தொடர்பாக ஒப்பந்தங்கள் கோரப்பட்டு அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் பல சுற்றுகளாக நடந்தன. முடிவில், 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏர் இந்தியா நிறுவனத்தை டாட்டா குழுமத்திடம் மத்திய அரசு விற்பனை செய்தது. இதனை மத்திய அரசும், டாட்டா நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து, டாட்டா தொடங்கிய ஏர் இந்தியா பற்றிய தகவல்கள் இணையத்தை சுழன்றடிக்கின்றன. ரத்தன் டாட்டா தன்னுடைய சமூகவலைதள பக்கங்களில் டாடா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜேஆர்டி டாடாவின் பழைய புகைப்படத்தை பகிர்ந்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.



அந்தப் பதிவில், " ஏர் இந்தியா நிறுவனத்திற்கான ஏலத்தை டாடா குழுமம் வென்றது பெரும் மகிழ்ச்சி செய்தி. ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் கட்டியெழுப்ப கடுமையான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றாலும், விமான துறையில் டாடா குழுமத்திற்கு இது ஒரு வலுவான சந்தை வாய்ப்பை வழங்கும் என நம்புகிறேன் என தெரிவித்திருந்தார்.

Also read... கூகுள் தலைமை நிறுவன அதிகாரி தினமும் காலையில் என்ன செய்வார் தெரியுமா? அவரே கூறிய தகவல்!

மேலும், ஏர் இந்தியாவுக்கான மதிப்பையும், நற்பெயரையும் மீண்டும் பெற டாடா குழுமத்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது நம்முடன் ஜேஆர்டி டாடா இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், டாட்டா நிறுவனத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறமான சிவப்பு மற்றும் வெள்ளை கலரில், விமானம் போலவே தத்ரூபமாக மும்பையில் அமைக்கப்பட்டுள்ள உணவகத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள ரத்தன் டாட்டா, சர் ரத்தன் டாட்டா இன்ஸ்டிடியூட்டையும் டேக் செய்துள்ளார். 1928 ஆம் ஆண்டு இந்த உணவகத்தை, தனது கணவர் சர் ரத்தன் டாட்டாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக லேடி நவாஜ்பாய் தொடங்கினார்.

டாட்டா ஏர்லைன்ஸ் என்ற பெயரில் 1932 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த விமான நிறுவனம், 1946 ஆம் ஆண்டு ஏர் இந்தியாவாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1953 ஆம் ஆண்டு இந்த விமான நிறுவனம் முழுவதுமாக தேசியமயமாக்கப்பட்டது. கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்குப்பிறகு விமான நிறுவனத்தை தொடங்கிய அந்த நிறுவனத்தின் கைகளுக்கே ஏர் இந்தியா சென்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: