ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

முன்னாள் ஊழியரின் வீட்டுக்கு சென்று நலம் விசாரித்த ரத்தன் டாடா- குவியும் பாராட்டு!

முன்னாள் ஊழியரின் வீட்டுக்கு சென்று நலம் விசாரித்த ரத்தன் டாடா- குவியும் பாராட்டு!

படம்: லிங்க்ட்இன்

படம்: லிங்க்ட்இன்

எந்தவொரு மீடியா வெளிச்சத்துக்கும் இடம் கொடுக்காமல், ஊழியரின் உடல்நலனை மட்டுமே கருத்தில் கொண்ட அவரின் இந்த செயல் மற்றவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் தேசாய் கூறியுள்ளார்.

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  உடல்நல குறைவால் 2 ஆண்டுகளுக்கும் மேலாக சிகிச்சை பெற்றும் வரும் முன்னாள் ஊழியரின் வீட்டுக்கு நேரில் சென்று நலம் விசாரித்த ரத்தன் டாடாவின் செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

  டாடா நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் புனேவில் வசித்து வருகிறார். உடல் நலம் குன்றிய அவர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறார். இதனையறிந்த ரத்தன் டாடா (Ratan TaTa) மும்பையில் இருந்து புனே சென்று முன்னாள் ஊழியரையும் அவரது குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். இந்த புகைப்படத்தை பிரிமாவெர்ஸ் (Primaverse) நிறுவனத்தின் இயக்குநர் தேசாய் தன்னுடைய LinkedIn அக்கவுண்டில் ஷேர் செய்துள்ளார். அதில், புனே பிரண்ட்ஸ் சொசைட்டியில் வசிக்கும் டாடா நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் மற்றும் அவரது குடும்பதினரை இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான ரத்தன் டாடா கனிவுடன் விசாரிக்கிறார் என குறிப்பிட்டிருந்தார். 

  மேலும் ரத்தன் டாடா வாழும் ஜாம்பவான் என்பதற்கு இந்த செயல் ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. முன்னாள் ஊழியரின் நிலையை விசாரித்துச் செல்ல ரத்தன் டாடா மும்பையில் இருந்து புனே வந்தது என்பது உண்மையிலேயே என்னை நெகிழச் செய்துள்ளது. இதுபோன்ற உயர்வான குணங்களை மற்ற தொழிலதிபர்களும் கற்றுக்கொள்ள வேண்டும். பணம் மட்டுமே நோக்கமாக இருக்கக்கூடாது. தொழிலதிபர்களுக்கு டாடாவைப் போன்ற மனிதநேயமும் இருக்க வேண்டும். மனித நேயத்தை விட மிகப்பெரிய குணம் ஒன்று உலகத்தில் இல்லை" என மனம் நெகிழ்ந்து எழுதியுள்ளார். 

  Also read... சேவை விதிமுறைகளை அப்டேட் செய்துள்ள WhatsApp - இதை செய்யாவிடில் உங்கள் அக்கவுண்ட் நீக்கப்படும்!

  மேலும், எந்தவொரு மீடியா வெளிச்சத்துக்கும் இடம் கொடுக்காமல், ஊழியரின் உடல்நலனை மட்டுமே கருத்தில் கொண்ட அவரின் இந்த செயல் மற்றவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் தேசாய் கூறியுள்ளார். இந்த பதிவை அவர் பதிவு செய்த சில மணி நேரங்களில் நெட்டிசன்களின் கவனத்தைப் பெற்றது. தொழிலதிபர் ரத்தன் டாடாவின் இந்த செயல் உண்மையிலேயே மனம் நெகிழ வைப்பதாக நெட்டிசன்கள் கூறியுள்ளனர். 

  சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரத்தன் டாடா, அவ்வப்போது தன்னை ஈர்க்கும் சில வீடியோக்களையும், கருத்துகளையும் டிவிட்டரில் பகிர்வார். அண்மையில் கிறிஸ்துமஸ் விளம்பரத்துக்காக எடுக்கப்பட்ட வீடியோவில், பேத்தியை தூக்கிக் கொஞ்சுவதற்காக தாத்தா நாள்தோறும் உடற்பயிற்சி மேற்கொண்டது தன் கண்களை நனைத்துவிட்டதாக தெரிவித்திருந்தார். இந்த வீடியோவை அவர் பகிரந்த சில மணி நேரங்களில் கிறிஸ்துமஸ் விளம்பரம் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது. மேலும், அந்த வீடியோவின் காட்சிகள் மிகச்சிறப்பாக இருந்ததாகவும் பாராட்டியிருந்தார்.

  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Ratan TATA