Home /News /trend /

ரத்தன் டாடா பர்த் டே கொண்டாட்டம்! - நெட்டிசன்கள் புகழாரம்

ரத்தன் டாடா பர்த் டே கொண்டாட்டம்! - நெட்டிசன்கள் புகழாரம்

84-வது பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய ரத்தன் டாடா

84-வது பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய ரத்தன் டாடா

ஆடம்பரமான பார்ட்டி அல்லது அலங்காரங்கள் எதுவுமே இன்றி மிகச்சிறிய கப் கேக்கில் வைக்கப்பட்டிருந்த 2 மெழுகுவர்த்திகளை ஊதி அணைத்து தனது பிறந்தநாளை மிக மிக எளிமையாக கொண்டாடி இருக்கிறார்.

இந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா, கடந்த டிசம்பர் 28 அன்று 84-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை அடுத்து தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு பல பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகப் பிரமுகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். மேலும் தொலைநோக்கு பார்வையில் சிறந்து விளங்கும் ரத்தன் டாடாவுக்கு முக்கிய தொழிலதிபர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களிடமிருந்தும் வாழ்த்துகள் குவிந்தன.

பொதுவாக பிரபலமாகவும், செல்வாக்கு மிக்கவர்களாகவும் இருக்கும் மிக பெரிய விஐபி-க்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இன்டர்நெட்டில் பரவி நாடு முழுவதும் வைரலாவது வழக்கம். காரணம் அந்த கொண்டாடங்களின் போது முன்னெடுக்கப்படும் பிரமாண்டமான மற்றும் ஆடம்பர விஷயங்களாக இருக்கும். நம்மை சுற்றி உள்ளூரில் இருக்கும் பிரபலங்கள் கூட படு ஆடம்பரமாக தங்கள் பிறந்தநாள் விழாவை கொண்டாடி அதகளப்படுத்துவார்கள்.

அவர் சோஷியல் மீடியாக்களில் வைரலாகும். நாட்டிலேயே மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடாவின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வைரல் ஆகாமல் இருக்குமா என்ன? ஆனால் இதில் நம் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய ஒன்று ரத்தன் டாடாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் ஆடம்பரம் காரணமாக வைரலாகவில்லை.

மாறாக எளிமையின் காரணமாக வைரலாகி உள்ளது தான் ஸ்பெஷல். பொதுவாக உண்மையான பணக்காரர்கள் தங்களின் வசதிகள் அல்லது ஆடம்பரங்களை வெளிக்காட்டி கொள்ள மாட்டார்கள் என்பது பல பொருளாதார நிபுணர்களின் கருத்து. இதை தவறாமல் பின்பற்றுபவர்களில் ஒருவராக இருந்து வரும் ரத்தன் டாடா, தனது 84-வது பிறந்தநாள் கொண்டாடத்திற்காக 84 கிலோவில் லேட்டஸ்ட் கேக் எதையும் வாங்கி கட் செய்யவில்லை.



ஆடம்பரமான பார்ட்டி அல்லது அலங்காரங்கள் எதுவுமே இன்றி மிகச்சிறிய கப் கேக்கில் வைக்கப்பட்டிருந்த 2 மெழுகுவர்த்திகளை ஊதி அணைத்து தனது பிறந்தநாளை மிக மிக எளிமையாக கொண்டாடி இருக்கிறார். இது தொடர்பான வீடியோ கிளிப்பில், ரத்தன் டாடாவுடன் அவரது 27 வயது உதவியாளர் சாந்தனு நாயுடு இருக்கிறார். நாயுடு அவருக்காக பிறந்தநாள் பாடலை பாடி அவர் அருகில் சென்று தோளை அன்பாக பிடிக்கும் போது ரத்தன் டாடா கப்கேக்கில் இருக்கும் மெழுகுவர்த்தியை ஊதினார். பின்னர் நாயுடு கப் கேக்கில் இருந்து சிறிய பீஸை எடுத்து ரத்தன் டாடாவிற்கு ஊட்டிவிட, அதை சுவைத்தபடியே புன்னைக்கிறார் ரத்தன் டாடா.

Also read... 2 கைகளும், கால்களும் இல்லாத நபர் தன்னம்பிக்கையுடன் வண்டி ஓட்டும் வீடியோவை பார்த்து, அவருக்கு வேலை வழங்கிய ஆனந்த் மகேந்திரா!

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அனைவருமே ரத்தன் டாடாவின் எளிமையை புகழ்ந்து தள்ளியுள்ளனர். இவ்வளவு சாதித்த பிறகும், ஒரு பெரிய வணிக சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பிய பிறகும் அவர் தனது பிறந்தநாளை அடக்கமாக இவ்வளவு எளிமையான முறையில் கொண்டாடி உள்ளார் என்று பலரும் கமெண்ட்ஸ் செய்து உள்ளனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Birthday, Ratan TATA

அடுத்த செய்தி