Ravichandran Ashwin: ‘அப்படி சொல்லாதடா ச்சாரி மனசெல்லாம் வலிக்கிறது’ - மஞ்சரேக்கருக்கு கவுண்டர் கொடுத்த அஸ்வின்

ரவிச்சந்திரன் அஸ்வின்

அஸ்வினை தன்னால் எல்லா காலத்திலும் சிறந்த வீரர் என ஏற்றுக்கொள்ள முடியாது என சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

  • Share this:
‘எல்லா காலத்திலும் சிறந்த வீரர்’ என அஸ்வினை கூற முடியாது என கூறியதற்காக முன்னாள் இந்திய அணி வீரர் மஞ்சரேக்கரை அந்நியன் பட மீம் ஒன்றினை பயன்படுத்தி சமூக வலைத்தளத்தில் கவுண்டர் கொடுத்திருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

சமகால இந்திய கிரிக்கெட்டர்களில் சிறந்த ஒரு ஸ்பின்னராகவும், ஆல்ரவுண்டராகவும் விளங்குபவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். ஆனால் அஸ்வினை எல்லா காலத்திலும் சிறந்த ஒரு வீரராக (All-Time Great) தன்னால் குறிப்பிட முடியாது என தெரிவித்து அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறார் முன்னாள் இந்திய அணி வீரரும், பிரபல கிரிக்கெட் வர்ணணையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர்.

இ.எஸ்.பி.என் கிரிக்இன்ஃபோ-வின் யூடியூப் தளத்தில் கிரிக்கெட் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற சஞ்சய் மஞ்சரேக்கர், அஸ்வினை எல்லா காலத்திலும் சிறந்த வீரர் என தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்காக சமூக வலைத்தளங்களில் மஞ்சரேக்கருக்கு எதிர்ப்பு கிளம்பியதுடன், இதுகுறித்த விவாதத்திற்கும் வழிவகுத்தது.



இதனிடையே நேற்றிரவு தன்னுடைய கருத்துக்கு விளக்கம் அளித்து மஞ்சரேக்கர் ட்விட்டரில் பதிவிட்டார். அதில் “ஆல்-டைம் கிரேட் ’என்பது ஒரு கிரிக்கெட் வீரருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த பாராட்டு மற்றும் ஒப்புதல். டான் பிராட்மேன் கேரி சோபர்ஸ், கவாஸ்கர், டெண்டுல்கர், விராட் கோலி போன்ற கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் எனது புத்தகத்தில் எல்லா நேரத்திலும் பெரிய வீரர்கள். உரிய மரியாதையுடன் இதனை தெரிவிக்கிறேன், அஸ்வின் இன்னும் எல்லா நேரத்திலும் சிறந்தவராக இல்லை. #AllTimeGreatExplained😉” என்று பதிவிட்டிருந்தார்.



மஞ்சரேக்கரின் இந்த பதிவுக்கு தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் ட்விட்டரில் தக்க பதிலடி கொடுக்கத் தொடங்கினர். 2012-ல் விராட் கோலி டெஸ்ட் போட்டிக்கு தகுதியற்றவர் என மஞ்சரேக்கர் தெரிவித்திருந்தார். ஆனால் இன்று அவரே கோலியை ஆல்-டைம் கிரேட் என புகழ்ந்துள்ளார். இதுவே மஞ்சரேக்கரின் மடமையை எடுத்துரைக்கிறது என கூறி பதிலடி கொடுத்துள்ளார் இணையவாசி ஒருவர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து இதுவரை பதிலளிக்காமல் இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின், நேற்று மஞ்சரேக்கரின் ட்விட்டுக்கு பங்கமான பதிலடியை தந்திருக்கிறார்.



அந்நியன் படத்தில் நடிகர் விக்ரமுக்கும், விவேக்குமான டயலாக்கான ‘அப்படி சொல்லாதடா ச்சாரி, மனசெல்லாம் வலிக்கிறது’ என மீம் ஒன்றை பகிர்ந்து சிரிக்கும் எமோஜிகளை தன்னுடைய பதிலாக கொடுத்திருக்கிறார் அஸ்வின். அஸ்வினின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.

மேலும் தமிழ் தெரியாதவர்களுக்கு, இது ஒரு படத்தின் டயலாக் என்ற பின்குறிப்பையும் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அஸ்வினிடம் உள்ள ஒரு அடிப்படை பிரச்னை என்னவென்றால் SENA என சொல்லக்கூடிய தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் உள்ள மைதானங்கள் பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு உகந்ததாகும். ஆனால் இந்திய வீரர்கள் இங்கு திணறலை சந்திக்கின்றனர். ஆச்சரியம் தரும் வகையில் மேற்கண்ட இந்த 4 நாடுகளில் அஸ்வின் ஒரு முறை 5விக்கெட் வீழ்த்தியதில்லை. இந்த நாடுகளில் ஒன்றில் கூட அவர் 5 விக்கெட் வீழ்த்தியதில்லை. அஸ்வின் உள்ளூர் பிட்ச்களில் சிறப்பாக விளையாடக்கூடியவர். அவருக்கு ஏற்ற அல்லது உகந்த ஆடுகளங்களில் விளையாடும் போது அவர் சிறந்த வீரர் தான் என்று இ.எஸ்.பி.என் கிரிக்இன்ஃபோ நிகழ்ச்சியில் மஞ்சரேக்கர் பேசியது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: