Home » News » Trend

அதிபயங்கர விஷத்தன்மை கொண்ட மிகவும் அரிதான இரட்டை தலை கண்ணாடி விரியான் பாம்பு - வீடியோ

மும்பை புறநகரிலிருந்து மிகவும் விஷத்தன்மை வாய்ந்த அரிதான இரட்டை தலை கண்ணாடி விரியான் பாம்பு மீட்கப்பட்டுள்ளது.

அதிபயங்கர விஷத்தன்மை கொண்ட மிகவும் அரிதான இரட்டை தலை கண்ணாடி விரியான் பாம்பு - வீடியோ
இரட்டை தலை கண்ணாடி விரியான் பாம்பு
  • Share this:
மகராஷ்டிராவில் மும்பையின் புறநகர் பகுதியில் வீட்டிற்கு வெளியே விசித்திரமான தோற்றத்தில் 11 செ.மீ நீளமுள்ள பாம்பு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கண்ணாடி விரியான் என்னும் அதிபயங்கர விஷதன்மை வகையை சேர்ந்தது இந்த பாம்பு.

கல்யாண் குடியிருப்பின் டிம்பிள் ஷா குடியிருப்பில் குழந்தைகள் பாம்பை பார்த்துள்ளனர். காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததையடுத்து வனத்துறையினர் மீட்டுள்ளனர்.

அதிபயங்கர விஷத்தன்மை கொண்ட இந்த பாம்பு 2 தலைகளுடன் உள்ளது. இது மிகவும் அரிதான ஒன்று என்றுள்ளனர். தலைகள் ஒவ்வொன்றும் 2 செ.மீ நீளம் கொண்டிருக்கின்றன. இது இந்தியாவில் காணப்படும் மிகவும் விஷமுள்ள பாம்பு இனங்களில் ஒன்றாகும்.


பிடிப்பட்ட பாம்பின் வீடியோவை ஐ.எஸ்.எஃப் அதிகாரி சுசாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறுகையில், மகாராஷ்டிராவில் இரண்டு தலை கண்ணாடி விரியான் பாம்பு மீட்கப்பட்டுள்ளது.



இதன் மரபணு அசாதாரணம், எனவே காடுகளில் உயிர்வாழும் விகிதம் குறைவாக உள்ளது. இதன் விஷம் மிகவும் ஆபத்தானது. ஏனென்றால் இது கடித்து சிறிது நேரத்தில் நீங்கள் தப்பினால், இதன் விஷத்தன்மை உங்களுக்கு தீங்கை விளைவிக்கும் என்றுள்ளார்.
First published: August 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading