கடல் யாருக்குமே தெரியாத பல்வேறு ரகசியங்களை புதைத்து வைத்துள்ளது. பூமியின் 71 சதவீத இடத்தினை கடல் ஆக்கிரமித்துள்ளது. அதன் பரந்து விரிந்த இடத்திற்கு ஏற்பவே தன்னுள்ளே பல்வேறு சுவாரஸ்யங்களை புதைத்து வைத்திருக்கிறது. பவளப்பாறைகள், கடல் பாசிகள், கடல் புற்கள் என 1500க்கும் மேற்பட்ட தாவர வகைகளும், 105 அடி வரை வளரக்கூடிய நீலத்திமிங்கலங்கள் முதல் முதுகெலுமில்லாத ஜெல்லி மீன்கள் வரை பல மில்லியன் கணக்கான உயிரினங்கள் வாழ்த்து வருகின்றன.
ஆய்வு முடிவுகளின் படி பூமியில் வாழும் 94 சதவீத உயிரினங்கள் கடல் வாழ் உயிரினங்கள் என்றும், அதில் மூன்றில் ஒரு சதவீதத்தை மட்டுமே நாம் அடையாளம் கண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் தான் நாம் நினைத்து கூட பார்க்க முடியாத சில வித்தியாசமான, விநோத தோற்றம் கொண்ட கடல் வாழ் உயிரினங்கள் அவ்வப்போது நம் கண்களில் தென்பட்டு வருகிறது.
தற்போது அலாஸ்கன் கடற்பகுதியில் இருந்து மிகவும் அரிதான, ட்ரான்ஸ்பிரண்ட் மீன் ஒன்றினை மீன் உயிரியலாளர் மற்றும் அவரது குழுவினர் கண்டுபிடித்துள்ளது சோசியல் மீடியாவில் பேசுபொருளாக மாறியுள்ளது. ப்ளாட்ச்டு ஸ்நைல் மீன் (‘blotched snailfish’) என்று பெயரிடப்பட்ட இந்த விசித்திரமான உயிரினம் மிகவும் தனித்துவமானது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தில் (NOAA) மீன் உயிரியலாளராக இருக்கும் சாரா ஃபிரைட்மேன், "நீண்ட காலமாக இவற்றில் ஒன்றை நேரில் பார்ப்பேன் என நம்பிக்கையுடன் காத்திருந்தேன்! ப்ளாட்ச்டு ஸ்நைல் மீன் மற்றும் அதன் அறிவியல் பெயரான கிரிஸ்டலிச்சிஸ் சைக்ளோஸ்பிலஸ் என்ற தலைப்பில் மீனின் படத்தை ட்வீட் செய்துள்ளார்.
12 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த புதிய வகை உயிரினம்
ப்ளாட்ச்டு ஸ்நைல் மீன் தனித்துவமான வெளிப்படையான, சிவப்பு நிற உடலைக் கொண்டுள்ளது. அவை அவற்றின் அன்றாட செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆழ்கடல் பகுதிகளில் வேட்டையாடும் மீன் வகைகள் அதிகம், அவற்றிடம் இருந்து நீருக்கடியில் தங்களை மறைத்துக்கொள்ள இந்த ட்ரான்ஸ்பிரண்ட் ஆன உடல் அமைப்பை அந்த மீன்கள் பயன்படுத்துகின்றன. அதாவது நீரில் நீந்தும் போது ஒளியின் அலைநீளங்களுக்கு ஏற்ப உயிரினங்கள் தகவமைத்துக் கொள்கின்றன.
சிவப்பு நிற ஒளியானது மிகக் குறுகிய அலைநீளத்தைக் கொண்டிருப்பதால், அது ஆழமான இருண்ட நீரைச் சென்றடையாது மற்றும் ப்ளாட்ச்டு ஸ்நைல் மீன்களை ஒளிரச் செய்கிறது. அதனால் இவை வேட்டையாடும் ஆழ்கடல் மீன்களின் கண்ணுக்கு புலப்படாமல் தப்பிக்கின்றன. இந்த நத்தைமீன்களின் உடலின் அடிப்பகுதியில் உள்ள கப்பு போன்ற அமைப்புபாறைகளில் ஒட்டிக்கொள்ளவும், படியான வலுவான நீர் நீரோட்டங்களில் இறுக்கமாகவும் இருக்க உதவுகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்தைச் சேர்ந்த ஷெல் லாங்மோர் என்ற பெண்மணி, க்வினெட் கடற்கரைக்குச் சென்றிருந்த போது, பார்க்க ஏலியன் போல் தோற்றம் கொண்ட விசித்திரமான உயிரினத்தை கண்டுபிடித்தார். முதலில் அதனை ஏலியன் போல் தோற்றம் கொண்ட வித்தியாசமான உயிரினம் என்றே பலரும் நினைத்தனர். ஆனால் அது கூஸ்னெக் பார்னாக்கிள்ஸ் என்ற மிகவும் விலை உயர்ந்த கடல் உயிரினம் என்பது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.