ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ஒபாமாவுக்காக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக 'ஷூ' விற்பனை - விலையை கேட்டா ஆடிப்போயிருவீங்க!

ஒபாமாவுக்காக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக 'ஷூ' விற்பனை - விலையை கேட்டா ஆடிப்போயிருவீங்க!

ஒபாமா

ஒபாமா

பிரத்யேக விஷயம் என்னவென்றால் இந்த ஷூவில், அமெரிக்க அதிபரின் முத்திரையும், 44 வது அதிபருக்காக உருவாக்கப்பட்டது என்பதை குறிக்கும் விதமாக 44 என்ற எண்ணும் இடம்பெற்றிருக்கும்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஓபாமாவுக்காக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக ஸ்போர்ட்ஸ் விற்பனைக்கு வந்துள்ளது.

அமெரிக்காவின் 44வது அதிபராக பொறுப்பு வகித்த பராக் ஒபாமா, விளையாட்டுகளின் மீது மிகுந்த ஆர்வமுடையவர். கூடைப்பந்தாட்ட வீரரான அவர், பள்ளி பருவத்தில் ஸ்டேட் சாம்பியஷிப்களையெல்லாம் வெற்றிபெற்றுள்ளார். இந்நிலையில், 2009 ஆம் ஆண்டு அவர் அதிபராக பதவி வகித்தபோது, ஒபாமா விளையாட்டுகளின் மீது கொண்ட ஆர்வத்தை குறிக்கும் விதமாக நைக் நிறுவனம் அவருக்காக ஸ்பெஷலான ஸ்போர்ட்ஸ் ஷூவை தயாரித்தது.

ஒரு மாடல் ஷூவை அவர் வைத்துள்ள நிலையில், மற்றொரு சாம்பிள் ஷூ விற்பனைக்கு வந்துள்ளது. அமெரிக்காவின் முன்னணி ஆன்லைன் நிறுவனமான சோதெபி (Sotheby’s) தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் தற்போதைய விலை 25 ஆயிரம் டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இந்த ஷூக்களின் விலை 18, 21,986 ரூபாய் ஆகும். எனினும் இந்த ஷூவை ஒபாமா அணிந்ததில்லை. அவருக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது என்பதால், ஷூ பிரியர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களிடையே கவனம் பெற்றுள்ளது. 

ஸ்போர்ட்ஸ் ஷூக்களை வடிவமைப்பதில் பிரபலமான நிறுவனமான நைக் நிறுவனத்தின் மிகவும் அரிதினும் அரிதான மாடல், ஆன்லைன் வர்த்தக நிறுவனமான சோதெபி தெரிவித்துள்ளது. இந்த ஷூக்கள் வடிவமைக்கப்பட்டு 12 ஆண்டுகள் கடந்தாலும், இன்னும் நல்ல நிலையில் இருப்பதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கும், நைக் நிறுவனதுக்குமான தொடர்பு 1979 ஆம் ஆண்டில் இருந்து தோடர்கிறது. ஹவாய் பகுதியில் உள்ள புனாஹூ பள்ளியில் அவர் படித்தபோது, அங்கு வெர்சிட்டி கூடைப்பந்தாட்ட அணியில் விளையாடினார். 

Also read... ஆரோக்கியமான மற்றும் பளபளக்கும் சருமம் வேண்டுமா... இந்த ஸ்கின்கேர் டிப்ஸ்களை ட்ரை பண்ணலாம்!

அப்போது, ஸ்டேட் சாம்பியன் ஷிப் பட்டத்தை வென்ற ஒபாமா, நைக் நிறுவனத்தின் பிளேசர்ஸை அணிந்திருந்தார். தேர்தல் பிரச்சாரங்களின்போதும் ஒபாமாவும், நைக் நிறுவனமும் தொடர்பில் இருந்தனர். மேலும், சிகாகோவில் உள்ள ஒபாமா பிரசிடென்சியல் சென்டரின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக, அந்த நிறுவனம் ஒபாமாவின் தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலரை கொடையாகவும் கொடுத்துள்ளது. ஒபாமாவுடன் நீண்டநெடிய தொடர்பை கொண்டுள்ள நைக் நிறுவனம் அவருக்காக பிரத்யேகமாக ஷூ ஒன்றை வடிவமைத்ததில் ஆச்சரியப்படுதற்கு ஒன்றுமில்லை. 

விற்பனைக்கு வந்துள்ள ஷூவும், 2008 ஆம் ஆண்டு அமெரிக்க கூடைப்பந்தாட்ட அணிக்காக வடிவமைக்கப்பட்ட ‘United We Rise’வெர்சனில் உருவாக்கப்பட்டதாகும். பிரத்யேக விஷயம் என்னவென்றால் இந்த ஷூவில், அமெரிக்க அதிபரின் முத்திரையும், 44 வது அதிபருக்காக உருவாக்கப்பட்டது என்பதை குறிக்கும் விதமாக 44 என்ற எண்ணும் இடம்பெற்றிருக்கும். ஷூவின் இன்சோல்களில் நாட்டுப்பற்றை வலியுறுத்தும் கழுகுகும், அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டான 1776 -ம் பொறிக்கப்பட்டிருக்கும். சிறப்பு தகவல்களை கொண்ட இந்த ஷூ மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Barack Obama