முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / WATCH - கடலில் மூழ்கி 111 ஆண்டுகள்.. 1986ல் எடுக்கப்பட்ட டைட்டானிக் கப்பலின் அரிய வீடியோ வெளியீடு!

WATCH - கடலில் மூழ்கி 111 ஆண்டுகள்.. 1986ல் எடுக்கப்பட்ட டைட்டானிக் கப்பலின் அரிய வீடியோ வெளியீடு!

டைட்டானிக்

டைட்டானிக்

Titanic : முதல் பயணத்தை நிறைவு செய்யாமலேயே டைட்டானிக் சொகுசு கப்பல் தண்ணீரில் மூழ்கியது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, Indiaamericaamerica

டைட்டானிக் திரைப்படம் வெளியான 25ம் ஆண்டை கொண்டாடும் வகையில், 111 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் குறித்த, அரிய வீடியோ வெளியாகி உள்ளது.

இங்கிலாந்தின் செளத்தாம்ப்டனில் இருந்து கடந்த 1912ம் ஆண்டு 1,500-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு தன் முதல் பயணத்தை தொடங்கியது. கடவுளே நினைத்தாலும் இந்தக் கப்பலை கவிழ்க்க முடியாது என்று கூறினார் டைட்டானிக் கப்பலின் கேப்டன். ஆனால், முதல் பயணத்தை நிறைவு செய்யாமலேயே டைட்டானிக் சொகுசு கப்பல், 1912 ஏப்ரல் 15ம் தேதி, அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறையில் மோதி மூழ்கியது. கப்பல் விபத்தை ஆராய, 1985ம் ஆண்டு இறுதியில், முதல் முறையாக ‘உட்ஸ் ஹோல் ஓஷியானிக் நிறுவனம்’ - பிரெஞ்சு நிறுவனத்துடன் இணைந்து குழு அனுப்பியது. அந்த குழுவினர் ஆய்வை முடித்துக் கொண்டு 1986ம் ஆண்டு ஜூனில் திரும்பினர். எனினும், அங்கு பதிவு செய்யப்பட்ட வீடியோ வெளியிடப்படாமல் இருந்தது.

இந்நிலையில், ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், வெளியாகி பெரும் வெற்றிபெற்ற டைட்டானிக் திரைப்படத்தின் 25ம் ஆண்டை கொண்டாடும் வகையில், அந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 80 நிமிட காட்சிப் பதிவு அதில் இடம்பெற்றுள்ளது

First published:

Tags: Titanic