• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • இரண்டு தலைகள், மூன்று கண்களுடன் பிறந்த அதிசய ‘கன்றுக்குட்டி’ - தெய்வமாக வழிபடும் மக்கள்!

இரண்டு தலைகள், மூன்று கண்களுடன் பிறந்த அதிசய ‘கன்றுக்குட்டி’ - தெய்வமாக வழிபடும் மக்கள்!

இரண்டு தலைகள், மூன்று கண்களுடன் பிறந்த அதிசய ‘கன்றுக்குட்டி’

இரண்டு தலைகள், மூன்று கண்களுடன் பிறந்த அதிசய ‘கன்றுக்குட்டி’

இந்த செய்தியை கேள்விப்பட்ட அருகில் உள்ள கிராமத்தினர் பலரும் அதிசய கன்றுக்குட்டியினை வந்து பார்த்து செல்கின்றனர்.

  • Share this:
ஒடிசாவின் நப்ரங்க்பூரில் 2 தலைகள் மற்றும் 3 கண்களுடன் பிறந்த அரிய கன்றுக்குட்டியினை மக்கள் அதை கடவுள் துர்க்கையின் அவதாரமாக வழிபட்டு வருகிறார்கள்.

ஒடிசாவின் நப்ரங்க்பூரில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த நவராத்திரியின் போது, ஒரு பசுமாடு இரண்டு தலைகள் மற்றும் மூன்று கண்களுடன் ஒரு அறிய கன்றுக்குட்டியை ஈன்றது. இந்த செய்தி உடனே அக்கம் பக்கம் இருக்கும் கிராமங்கள் முழுவதும் பரவி பரபரப்பானது.

இந்த அரிய கன்றுக்குட்டி நப்ரங்க்பூர் மாவட்டத்தில் குமுளி பஞ்சாயத்தில் உள்ள பிஜப்பூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி தனிராமின் வீட்டில் பிறந்துள்ளது. இந்த கன்றுக்குட்டி நவராத்திரியின் போது பிறந்துள்ளதால், பொதுமக்கள் அனைவரும் துர்க்கை தெய்வமாக வழிபட தொடங்கியுள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த மாட்டினை மற்றொருவரிடம் இருந்து வாங்கினார் விவசாயி தனிராம். சமீபத்தில் அந்த மாடு கர்ப்பமாக இருந்தது. வழக்கம் போல் பிரசவம் இருக்கும் என்று எதிர்பார்த்த தனிராம் அதிர்ச்சி அடைந்தார். அந்த மாடு ஈன்ற கன்றுக்குட்டி இரண்டு தலைகளுடனும்,மூன்று கண்களுடனும் பிறந்ததே அந்த அதிர்ச்சிக்கு காரணம் ஆகும்.

‘பிறந்த கன்றுக்குட்டி இரண்டு தலைகளுடனும்,மூன்று கண்களுடனும் இருப்பதால் அதன் தாய் பசு இக்கன்றுக்குட்டிக்கு உணவு அளிக்க முடியாமல் தவிக்கிறது.கன்றுக்குட்டி தாயிடம் இருந்து பால் குடிப்பதில் சிக்கல் உள்ளதால், வெளியில் இருந்து பால் வாங்கி அக்கன்றுக்கு உணவளிக்க வேண்டியதாக இருக்கிறது ’ என்றார் தனிராம். இந்த கன்றுக்குட்டியினை கடவுள் துர்க்கையின் அவதாரமாக பார்க்கிறார் தனிராம்.



இந்த செய்தியை கேள்விப்பட்ட அருகில் உள்ள கிராமத்தினர் பலரும் அதிசய கன்றுக்குட்டியினை வந்து பார்த்து செல்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பு இதே போல் சம்பவம் உத்திரபிரதேசத்தில் நடைபெற்றது. ஒரு பசு இரண்டு வாய்கள், இரண்டு காதுகள் மற்றும் நான்கு கண்களுடன் ஒரு அரிய இரண்டு தலை கன்று ஈன்றது. சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு மதுராந்தகம் அருகே மூன்று கண்களை உடைய கன்று பிறந்தது. அதனை அப்பகுதி மக்கள் ‘சிவனின்’ அவதாரமாக வழிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also read... ராட்சத பாம்புடன் விளையாடும் 2 வயது சிறுவன் - வைரலாகும் வீடியோ!

கால்நடை மருத்துவர்களின் கூற்றுப்படி, கருவின் வளர்ச்சியின் போது உயிரணுக்களின் அசாதாரண வளர்ச்சியின் காரணமாக இது போன்ற மாறுபாடுகள் ஏற்படுகிறது என்கின்றனர். இதுகுறித்து பேசிய கால்நடை மருத்துவர் டாக்டர் சத்ய பிரகாஷ் பாண்டே, ‘இது தெய்வீகம் சம்பந்தப்பட்ட அதிசயம் அல்ல. கருவில் கருவின் வளர்ச்சியின் போது, ​​செல்கள் பல பகுதிகளாகப் பிரியும். இந்த நிகழ்வின் போது சில நேரங்களில் உயிரணுக்களின் கூடுதல் வளர்ச்சி ஏற்படும். இதனால் தான் இரண்டு தலைகள், மூன்று கண்கள் உருவாகின்றன.மற்றபடி இதற்கும், ஆன்மீகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: