Home /News /trend /

மூளையை உண்ணும் அமீபா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர் - ஏரியில் நீந்தியதால் தொற்று ஏற்பட்டதா என ஆய்வு

மூளையை உண்ணும் அமீபா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர் - ஏரியில் நீந்தியதால் தொற்று ஏற்பட்டதா என ஆய்வு

மூளையை உண்ணும் அமீபா

மூளையை உண்ணும் அமீபா

ஏரி, குளங்களில் நீச்சல் அடிக்கும் பொழுது இந்த அமீபா நம் மூக்கு வழியாக  உடலுக்குள் நுழையும். பின் மூளையை அடைந்து அதன் செல்களை கொஞ்சம் கொஞ்சமாக உண்ணத் தொடங்கும்

அமெரிக்காவின் மிசோரியில் வசிக்கும் ஒருவருக்கு அரிதான, உயிருக்கு ஆபத்தான மூளை உண்ணும் நோய்த்தொற்றைக் கண்டுபிடித்ததாக மிசோரி மாகாண சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை அறிவித்தது.

அமெரிக்காவின் ஐயோவா பகுதியில் டெய்லர் கவுண்டியில் உள்ள லேக் 'ஆஃப் த்ரீ ஃபயர்ஸ்' ஏரியில் குளிக்க சென்ற ஒருவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அவருக்கு PAM அமீபாவால் ஏற்படும் மூளை அழிப்பு நோய்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

அந்த ஏரியில் நீந்தியதால் தொற்று ஏற்பட்டதோ என்ற யுகத்தின் பேரில் ஏரி மற்றும் அதை ஒட்டிய கடற்கரை தற்காலிகமாக மூடப்படும் என்று மாகாண சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஏரியில் Naegleria fowleri கிருமி இருப்பதை உறுதி செய்வதற்கான சோதனை நடைபெற்று வருகிறது

கொசுவிற்கு உணவளிக்கும் சாதனத்திற்கு காப்புரிமை கோரும் புதுச்சேரி பூச்சியியல் ஆய்வகம்!

முதன்மை அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் (PAM) என்று அழைக்கப்படும், இந்த தொற்று Naegleria fowleri எனப்படும் சூடான நன்னீரில் காணப்படும் நுண்ணிய ஒற்றை செல் அமீபாவால் ஏற்படுகிறது.

அறிவியல் பாடத்தில் ஒற்றை செல் உயிரினமான அமீபா பற்றி படித்திருப்போம். அமீபாக்கள் பொதுவாக ஏரிகள், ஆறுகள் மற்றும் குளங்கள் போன்ற சூடான நன்னீர் நீரில் வாழும்.  46C வெப்பத்தில் இனப்பெருக்கம் செய்யும். இருப்பினும், இந்த மூளை உண்ணும் PAM மிகவும் அரிதானது.

ஏரி, குளங்களில் நீச்சல் அடிக்கும் பொழுது இந்த அமீபா நம் மூக்கு வழியாக  உடலுக்குள் நுழையும். பின் மூளையை அடைந்து அதன் செல்களை கொஞ்சம் கொஞ்சமாக உண்ணத் தொடங்கும். இதனால் நினைவிழப்பு, வலிப்பு, நிலையற்ற மன நிலை, பிரமை மற்றும் கோமா முதலிய அறிகுறிகள் ஏற்படும்.

ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் மருந்து கண்டுபிடிப்பு மையத்தில் பணிபுரியும் ஆராய்ச்சி விஞ்ஞானி கிறிஸ்டோபர் ரைஸ் கூறுகையில், "இது உலகின் மிக மோசமான ஒட்டுண்ணியாகும், ஏனெனில் இது அத்தகைய பேரழிவு நோய்க்குறியை ஏற்படுத்துகிறது" என்கிறார்.



CDC புள்ளிவிவரங்களின்படி,  இந்த அமீபாவால் ஏற்படும் நோய்த்தொற்றின் இறப்பு விகிதம் 97% க்கும் அதிகமாக உள்ளது.1962 முதல், அமெரிக்காவில் 154 நோயாளிகள் மட்டுமே இந்த உயிரினத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதிலும் 4 பேர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர்.

1987 ஆம் ஆண்டு மிசோரி குடியிருப்பாளரிடையே ஒரே ஒரு நோய் தொற்று கண்டறியப்பட்டது. அதன் பின்னர் இப்போது தான் இந்த உயிரினத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரை கண்டறிந்துள்ளனர். உணவு, குடிநீர் மூலம் இந்த நோய் பரவாது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதே போல் ஒரு நோயாளியிடம் இருந்து மற்றவர்களுக்கு தொடுதலால் பரவாது. நீச்சலடிக்கும் நீரின் வழியாகத் தான் பரவும் என்கின்றனர்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Amoeba, Brain Disorder, United States of America

அடுத்த செய்தி