கிண்ணத்தில் அடித்த அதிர்ஷ்டம்... 35 டாலருக்கு வாங்கிய கிண்ணம் விரைவில் 5 லட்சம் டாலருக்கு ஏலம்!

கிண்ணத்தில் அடித்த அதிர்ஷ்டம்... 35 டாலருக்கு வாங்கிய கிண்ணம் விரைவில் 5 லட்சம் டாலருக்கு ஏலம்!

கிண்ணத்தில் அடித்த அதிர்ஷ்டம்

சீனாவில் ஆட்சி செய்த 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மிங் வம்சத்தைச் சேர்ந்த கிண்ணம் என்பதை கண்டுபிடித்தனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
அமெரிக்காவில் சீனாவின் முக்கிய அரசு வம்சத்தை சேர்ந்த 15ம் நூற்றாண்டை சேர்ந்த கிண்ணத்தை 35 டாலருக்கு வாங்கிய ஒருவர், அதனை விரைவில் மிகப்பெரிய தொகைக்கு ஏலம் விட திட்டமிட்டுள்ளார்.

இங்கிலாந்தின் கனெக்டிக்கட் (Connecticut,) பகுதிக்கு சென்ற ஒரு நபர் அங்கிருந்த ஒரு கடையில் இருந்த கிண்ணத்தை 35 டாலர் கொடுத்து வாங்கியுள்ளார். பின்னர், அந்த கிண்ணம் விலையுயர்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளது என கருதிய அந்த நபர் இணையத்தில் முழுமையாக அலசி ஆராய்ந்துள்ளார். அமெரிக்காவில் செயல்பட்டு வரும் சோத்பே (Sotheby) நிறுவனத்தை தொடர்பு கொண்ட அவர், கிண்ணத்தின் புகைப்படங்களை அந்த நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளார்.

அங்கிருந்த சீன கலைப்பொருள் நிபுணர்களான மேக்டீர் (Angela McAteer) மற்றும் ஹேங் இன் (Hang Yin)ஆகியோர் கிண்ணத்தின் வேலைப்பாடுகளையும், ஓவியத்தையும் பார்த்து வியந்துள்ளனர். இதனையடுத்து அந்த கிண்ணம் குறித்து முழுமையாக ஆய்வு செய்யும்போது, சீனாவில் ஆட்சி செய்த 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மிங் வம்சத்தைச் சேர்ந்த கிண்ணம் என்பதை கண்டுபிடித்தனர். மிங் வம்சம் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக கிண்ணங்களை பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் ஆட்சி செய்த காலத்தை வரலாற்று ஆய்வாளர்கள் கிண்ணங்களின் பொற்காலம் எனக் குறிப்பிடுகின்றனர்.

Also read... கனவை நிறைவேற்ற வயதெல்லாம் ஒரு தடையா? இன்ஸ்டாவை கலக்கும் 62 வயது டான்ஸ் பாட்டி!

1402 முதல் 1424ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆட்சி செய்த, மிங் வம்சத்தின் மூன்றாம் பேரரசர் யாங்கிள் (Yongle) இந்த கிண்ணங்களை பயன்படுத்தியிருக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். நீல நிற கோபால்ட்டால் வரையப்பட்ட பூக்கள் ஓவியங்கள் அந்த கிண்ணத்தில் இடம்பெற்றுள்ளன. மிகவும் விலை உயர்ந்த கலைப் பொருட்களுள் ஒன்றாக கருதப்படும் இந்த கிண்ணம் 16 சென்டி மீட்டர் விட்டத்துடன் உள்ளது. உலகிலேயே இந்த வகை கிண்ணங்கள் இதுவரை 6 மட்டுமே உள்ளதாக மேக்டீர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இந்த வகை கிண்ணங்கள் ஏதும் இல்லை எனத் தெரிவித்த அவர், லண்டன் அருங்காட்சியகத்தில் இரண்டு இருப்பதாகவும், தைவானில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இரண்டு கிண்ணங்கள் இருப்பதாகவும் கூறினார். மற்றொன்று ஈரானில், தெஹ்ரான் அருங்காட்சியகத்தில் உள்ளதாக மெக்டீர் கூறியுள்ளார். இதுபோன்ற கிண்ணங்கள் இன்னும் புழகத்தில் இருப்பது தன்னால் நம்பவே முடியவில்லை எனக் கூறிய அவர், நீண்ட காலமாக தேடிக்கொண்டிருந்த ஒரு கலைப்பொருள் தற்செயலாக கிடைத்தது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

வரும் மார்ச் 17ம் தேதி சீனாவைச் சேர்ந்த அரியவகை கலைப்பொருளான கோபால்ட் ஓவிய கிண்ணம், சோத்பே நிறுவனத்தின் சார்பில் ஏலம் விடப்பட உள்ளதாக மேக்டீர் தெரிவித்துள்ளார். மிகவும் அரியவகை கலைப்பொருட்களில் ஒன்றான இந்த கிண்ணம் ஏறத்தாழ 3 முதல் 5 லட்சம் அமெரிக்க டாலருக்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: