Home /News /trend /

சென்னை செஸ் ஒலிம்பியாட்டில் அனைவரது கவனத்தை ஈர்த்த செல்லக்குட்டி.. போர் புகையில் சதுரங்க போர் கற்ற சிறுமி!

சென்னை செஸ் ஒலிம்பியாட்டில் அனைவரது கவனத்தை ஈர்த்த செல்லக்குட்டி.. போர் புகையில் சதுரங்க போர் கற்ற சிறுமி!

 ராண்டா சேடர்

ராண்டா சேடர்

Chess Olympiad 2022 | ராண்டாவின் குழந்தைப் பருவத்தில் வறுமையும் போர் சுழலும் நிறைந்து அகதிகள் முகாமில் தான் இருந்துள்ளார்.

    மாமல்லபுரத்தில் நடக்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 8 வயது சிறுமியான பாலஸ்தீன நாட்டை சேர்ந்த ராண்டா சேடர் அனைவரின் கவனத்தை ஈர்த்துவருகிறார். இந்த போட்டியில் பங்கேற்ற 186 நாடுகளின் வீரர்களில் இளம் போட்டியாளராக இவர் களமிறங்கியுள்ளார்.

    ராண்டா சேடர் போர் சூழல் நிறைந்த பாலஸ்தீனம் நாட்டில் பிறந்தவர். உலகளவில் செஸ் விளையாட்டுக்கான தரவரிசையில் 6வது பிரிவில் 2 ஆம் இடத்தில் உள்ளார். மேலும் அண்மையில் பாலஸ்தீனத்தில் நடந்த தேசிய மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 8 வயதிலேயே செஸ் விளையாட்டில் உலக கவனத்தை ஈர்க்கும் இந்த சிறுமி வளர்ந்த சூழ்நிலை அதற்கு ஏதுவாக அமையவில்லை.

    பூமியில் நரகம் இருக்கிறது என்றால், அது பாலஸ்தீனத்தின் மிகப்பெரிய நகரான காசா (Gaza) தான் என்று ஒருமுறை கூறியிருக்கிறார் ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியா குட்டரெஸ். அந்த அளவிற்கு அங்கு எப்போதும் வெடிகுண்டுகள் சப்தமும், மரண ஓலமும் கேட்கக்கூடியது. அந்த பாலஸ்தீன நாட்டில் பிறந்தவர் தான் ராண்டா சேடர்.

    Also Read : SBI வங்கியில் ஹவுஸ் கீப்பிங் பணியில் சேர்ந்து, அதே வங்கியில் அதிகாரியான சாதனை பெண்

    அப்ப எப்படி இந்தளவிற்கு செஸ் வீராங்கனையாக இவர் மாறினால் என்றால் அதற்கு இவரின் தந்தை தான் காரணம். போர் சூழலில் தன் மகளுக்கு வீட்டுக்குள் விளையாட அவர் கற்றுத்தந்தது தான் தற்போது பெருகி 8 வயதில் உலக தரவரிசையில் 2 இடம் பிடிக்க உதவியுள்ளது.

    ராண்டாவின் குழந்தைப் பருவத்தில் வறுமையும் போர் சுழலும் நிறைந்து அகதிகள் முகாமில் தான் இருந்துள்ளார். இஸ்ரேல் ராணுவத்திற்கும், ஹமாஸ் அமைப்பிற்கும் அடிக்கடி சண்டை நடக்கும் ஹெப்ரான் நகரத்தில் இருக்கிறது இவரது வீடு. அடிக்கடி வீசப்படும் ஏவுகணைகள் மற்றும் குண்டுகளால், அதிகமாகப் பாதிக்கப்பட்ட இடங்களில் இவரது வீடும் ஒன்று.

    தனது நான்கு வயதிலேயே செஸ் காய்களை நகர்த்தத் தொடங்கிவிட்டார். அடுத்த ஆண்டிலேயே செஸ் விளையாட்டில் தேறிவிட்டார். 6 வயதிலேயே உள்ளூர் போட்டிகளில் விளையாடத் தொடங்கி தற்போது உலகளவில் விளையாடிக்கொண்டு இருக்கிறார். அவர் பங்கேற்ற பெரும் போட்டிகளில் இவருக்கு எதிரில் விளையாடியவர்கள் இவருடன் அதிகம் வயது உடையவர்கள் தான்.

    தற்போது தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பாலஸ்தீன ஓபன் அணி சார்பாகப் பங்கேற்றுள்ளார் ராண்டா செடார். இந்த அணியில் அவருடன் இணைந்து இளம் விரக்கனைகள் இந்து பேர் விளையாடுகின்றனர். ராண்டா செடார் தனது முதல் ஆட்டத்திலேயே 39 நகர்த்தலில் கொமோரோஸை சேர்ந்த ஃபஹிமா அலியைத் தோற்கடித்து வெற்றிபெற்றுள்ளார். மேலும் ஜூடிட் போல்கர் என்ற ஹங்கேரி நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற செஸ் விரகனையையுடன் விளையாடவேண்டும் என்பது அவரின் கனவாக உள்ளது.

    Also Read : பாகுபலி ராஜமாதா போல் தனது குழந்தையை மக்களுக்கு காட்டிய கொரில்லா - வைரல் வீடியோ

    இந்த சிறுவயதில் வளர்ந்த சூழ்நிலை தாண்டியும் ராண்டா செடார் சிரிப்புடன் அரங்கில் சுற்றித் திரிவதும் விளையாடுவதையும் செஸ் பலகையில் கவனம் செலுத்துவதையும் பார்ப்பதற்கு இனிமையாக உள்ளது என்பது பல பேரின் கருத்தாகவுள்ளது.
    Published by:Janvi
    First published:

    Tags: Chess, Chess Olympiad 2022, Trending

    அடுத்த செய்தி