தெலுங்கு திரையுலகில் டிரெண்டாகும் வீட்டுவேலை சேலஞ்ச்...! அசத்தும் திரைப் பிரபலங்கள்

வீட்டில் பொழுது போகாமல் தவிக்கும் ஆண்கள் வீட்டு பணிகள் செய்வதை கவுரமாக கருத வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகமும் இப்படி களமிறங்கி இருப்பது பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

தெலுங்கு திரையுலகில் டிரெண்டாகும் வீட்டுவேலை சேலஞ்ச்...! அசத்தும் திரைப் பிரபலங்கள்
வீட்டுவேலை சேலஞ்ச்
  • Share this:
ஊரடங்கு காலத்தில் ஆண்கள் வீட்டு பணிகளை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரும் வீடியோக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.

ஊரடங்கில் வீட்டிலேயே இருப்பதால் போர் அடிப்பதாக ஆண்கள் கூறி வரும் நிலையில், இல்லத்தரசிகளோ முன்பை விட வேலைப்பளு கூடிவிட்டதாக வருந்துகின்றனர். இந்த நிலையில் ஆண்களும் வீட்டு பணிகளை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற சேலஞ்சை தெலுங்கு திரையுலகினர் தற்போது டிரெண்ட் செய்து வருகின்றனர்.

அர்ஜுன் ரெட்டி படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா தொடங்கி வைத்த இந்த சவாலை ஏற்றுக்கொண்ட இயக்குனர் ராஜமௌலி, வீட்டு பணிகள் செய்யும் வீடியோவை வெளியிட்டதுடன், ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் தேஜா ஆகியோருக்கும் சவால் விடுத்திருந்தார்.ராஜமௌலியின் சவாலை ஏற்று உடனடியாக களத்தில் இறங்கிய ஜூனியர் என்.டி.ஆரும், ராம் சரண் தேஜாவும் அடுத்தடுத்து வீடியோக்களை விட Be the Real Man எனும் ஹாஷ்டாக் தேசிய அளவில் டிரெண்டானது.

இத்துடன் நிற்காமல் ஜூனியர் என்.டி.ஆரின் சவாலை ஏற்ற தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, வீட்டை சுத்தம் செய்வதுடன் தனது தாயாருக்கு தோசை செய்து தரும் வீடியோவையும் வெளியிட்டு கலங்கடித்தார். மேலும் தனது நண்பர் ரஜினிகாந்தும் இயக்குனர் மணிரத்னமும் இதேபோல் வீட்டு பணிகளை செய்ய வேண்டும் எனவும் சிரஞ்சீவி சவால் விடுத்துள்ளார்.மற்றொரு பிரபல நடிகர் வெங்கடேஷும் ஜூனியர் என்.டி.ஆர் கேட்டுக் கொண்டதன்படி வீட்டு வேலைகளில் தன்னை பிஸியாக மாற்றிக் கொண்டுள்ளார்.வீட்டில் பொழுது போகாமல் தவிக்கும் ஆண்கள் வீட்டு பணிகள் செய்வதை கவுரமாக கருத வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகமும் இப்படி களமிறங்கி இருப்பது பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.
First published: April 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading