Home » News » Trend » RAJINIKANTH TRENDING NOW SOCIAL MEDIA SKV

'முடிவெடுத்த பின்னால் நான் தடம் மாற மாட்டேன்' - இணையத்தில் ட்ரெண்டாகும் #Rajinikanth ஹேஷ்டேக்..

ட்விட்டரில், #Thalaivar, #Rajinikanth என்ற ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகியுள்ளது . இதில் நடிகர் ரஜினிகாந்தின் பாபா திரைப்பட வசனங்களையும், வீடியோக்களையும் ரஜினி ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

'முடிவெடுத்த பின்னால் நான் தடம் மாற மாட்டேன்' - இணையத்தில் ட்ரெண்டாகும் #Rajinikanth ஹேஷ்டேக்..
இணையத்தில் ட்ரெண்டாகும் #Rajinikanth ஹேஷ்டேக்
  • Share this:
நடிகர் ரஜினிகாந்த் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், மாவட்ட செயலாளர்கள் சந்திப்பு நடந்தது. அவர்களின் கருத்துக்களை என்னிடம் கூறினார்கள். நானும் எனது கருத்தை பகிர்ந்து கொண்டேன். நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் உங்கள் உடன் இருப்போம் என அவர்கள் கூறினர். நான் எனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிவிக்கிறேன் என கூறினார்.

இந்நிலையில் நேற்று மக்கள் மன்ற மாநில நிர்வாகி சுதாகர் ரஜினிகாந்துடன் போயஸ் கார்டன் இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். அரசியல் கட்சியை தொடங்கி, அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவித்தார்.

எனினும், கட்சி தொடங்குவதற்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை. கொரோனா பரவல் காரணமாக கட்சி தொடங்கும் திட்டத்தை ஒத்தி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. எனினும், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி உரிய நேரத்தில் முடிவெடுக்க உள்ளதாக ரஜினிகாந்த் விளக்கம் அளித்திருந்தார்.


இந்நிலையில், மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தியுள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்காக 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் இருந்து இன்று சென்னைக்கு வருகை தந்தனர்.

இதனிடையே ட்விட்டரில், #Thalaivar, #Rajinikanth என்ற ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகியுள்ளது . இதில் நடிகர் ரஜினிகாந்தின் பாபா திரைப்பட வசனங்களையும், வீடியோக்களையும் ரஜினி ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

  



 

 



 

 



 

 



 

 



 

 



 

 



 

 



 

 



 

 



 

முடிவெடுத்த பின்னால் நான் தடம் மாற மாட்டேன், முன் வைத்த காலை நான் பின் வைக்க மாட்டேன். என்னை நம்பி வந்தவரை ஏமாற்ற மாட்டேன், ஏணியாய் நான் இருந்து ஏமாற மாட்டேன்..உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்.. எனும் பாடல் வரிகளை பலரும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

 





உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

 
First published: November 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading