ஜப்பானில் 2-வது முறையாக ரஜினிகாந்தின் முத்து படம் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
1995-ம் ஆண்டு ரஜினிகாந்த் - மீனா நடிப்பில் வெளியான படம் முத்து. இந்தப் படத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். வெளியான சமயத்தில் இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் மூலம் ஜப்பானிலும் ரஜினிக்கு ரசிகர்கள் அதிகரித்தனர்.
மொழி தெரியாவிட்டாலும் சப் டைட்டில் மூலம் இந்தப் படத்தை ஜப்பான் ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர். இன்னும் சில ரசிகர்கள் சென்னைக்கு வந்து ரஜினிகாந்துடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். அதேநேரத்தில் ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் ரஜினிக்கு ரசிகர் மன்றம் ஒன்றும் உள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 23-ம் தேதி டான்சிங் மஹாராஜா என்ற பெயரில் 4டி தொழில்நுட்பத்தில் வெளியானது. இந்நிலையில் இரண்டாவது முறையாக இந்த ஆண்டும் ஜப்பானில் முத்து படம் வெளியாகிறது என்று ரசிகர் ஒருவர் ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார்.