அட கொடுமையே! கபாலி ரஜினி வேஷம் போட்டவர் மல்லாந்து விழுந்த சோகம்

, ட்ரெண்டிங் வீடியோ

ரஜினி போல ஸ்டைல் செய்ய நினைத்தவர் செம பல்பு வாங்கிய இந்த வீடியோவை ஒருவர் தனது செல்ஃபோனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளார்.

  • Share this:
தனக்கென பிரத்யேக ஸ்டைலை உருவாக்கி திரையுலகில் ட்ரெண்ட் செட் செய்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினி. அவருடைய ஒவ்வொரு அசைவிலும் ஒரு ஸ்டைல் பளிச்சிடும். இதனாலேயே அவருக்கு சிறியவர் முதல் பெரியவர் வரையில் ரசிகர்கள் பட்டாளம் இருந்து கொண்டிருக்கிறது. ரஜினியின் படங்கள் வெளியாகும் போது அது மக்களின் திருவிழாவாகவே பார்க்கப்படுகிறது. அவரின் கபாலி போன்ற படங்கள் வெளியான போது மொத்த ஆஃபிசுக்குமே லீவு விட்ட நிறுவனங்களும் உண்டு.

தமிழ் திரையுலகின் ஒரே சூப்பர் ஸ்டாராக தற்போதும் மின்னிக் கொண்டிருக்கும் ரஜினியுடனிய ஸ்டைலை பலரும் பின்பற்றுவதை பார்க்க முடியும். சாமானியர்கள் தொடங்கி சில திரை நட்சத்திரங்கள் கூட ரஜினியை இமிடேட் செய்து வருகின்றனர். அவருடைய ஸ்டைல் மக்களை அந்த அளவுக்கு ஈர்த்துள்ளது.

ரஜினியின் ஹேர் ஸ்டைல், அவர் போலவே உடை மற்றும் வேடமிட்டுக்கொண்டு கோவில் விழாக்கள், திருமணம் மற்றும் பிற நிகழ்ச்சிகளில் சில மேடைக் கலைஞர்கள் நடனமாடுவது, டயலாக் பேசுவது என ரசிகர்களை ஈர்த்து வருகின்றனர். ரஜினியை நேரில் பார்க்காதவர்கள் கூட இவர்களின் ஸ்டைலை காண்கிற போது உற்சாகமாகி விடுகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் மேடைக் கலைஞர் ஒருவர் கபாலி பட ரஜினி போல வேடமிட்டு நிகழ்ச்சி ஒன்றில் பெர்ஃபார்மன்ஸ் செய்து கொண்டிருந்தார். அவரை கீழே இருந்த ரசிகர்கள் உற்சாகப்படுத்தி வந்தனர்.




அப்போது கெத்தாக மேடையிலிருந்த சேர் ஒன்றினை அந்த நபர் எட்டி உதைத்த போது, எதிர்பாராதவிதமாக அந்த சேர், அவரின் காலில் சிக்கிக் கொண்டது, இதில் நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்தார். ரஜினி போல ஸ்டைல் செய்ய நினைத்தவர் செம பல்பு வாங்கிய இந்த வீடியோவை ஒருவர் தனது செல்ஃபோனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளார்.

Also Read:  ‘தலைவா.. தெய்வமே..’ சென்னை திரும்பினார் ரஜினி.. ரசிகர்களால் அதிர்ந்தது விமான நிலையம்..!

தற்போது கொரோனா காரணமாக பொது நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. இந்த வீடியோ ஊரடங்கு விதி அமல்படுத்துவதற்கு முன் எடுக்கப்பட்டதாகும். இருப்பினும் தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் ஹிட் அடித்திருக்கிறது. பழைய வீடியோ தற்போது ட்ரெண்ட் ஆக தொடங்கியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த வீடியோ பலரையும் சிரிக்க வைத்திருக்கிறது. ரஜினி போல வேடமிடலாம் ஆனால் அவராகவே மாறிவிட முடியாது என அவரின் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 



இந்நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருந்த நடிகர் ரஜினி இன்று அதிகாலை சென்னை திரும்பியுள்ளார். ரஜினி ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு தந்தனர். தலைவா.. தெய்வமே என ரசிகர்கள் போட்ட கோஷத்தால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: