பியர் க்ரில்ஸ் உடன் ரஜினிகாந்த்தின் காட்டுப்பயணம்... டீசர் வெளியிட்ட டிஸ்கவரி..!

காட்டுக்குள் பயணம் மேற்கொண்டு பல சவால்களை சமாளிக்கும் பியர் க்ரில்ஸ்-க்கு இந்தியாவில் பெரும் ரசிகர்கள் பட்டாளமே உண்டு.

பியர் க்ரில்ஸ் உடன் ரஜினிகாந்த்தின் காட்டுப்பயணம்... டீசர் வெளியிட்ட டிஸ்கவரி..!
பியர் க்ரில்ஸ் உடன் ரஜினிகாந்த்
  • Share this:
நடிகர் ரஜினிகாந்த் ‘பியர் க்ரில்ஸ் உடன் காட்டுக்குள்’ என்னும் டிஸ்கவரி சேனல் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

பியர் க்ரில்ஸ் உடன் ரஜினிகாந்த் மேற்கொண்ட காட்டுப்பயணம் விரைவில் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் அந்தக் காட்டுப் பயணம் குறித்தான டீசர் வீடியோ ஒன்றை டிஸ்கவரி சேனல் வெளியிட்டுள்ளது.

காட்டுக்குள் பயணம் மேற்கொண்டு பல சவால்களை சமாளிக்கும் பியர் க்ரில்ஸ்-க்கு இந்தியாவில் பெரும் ரசிகர்கள் பட்டாளமே உண்டு. சமீபத்தில் பிரதமர் மோடி உடன் பியர் க்ரில்ஸின் காட்டுப் பயணம் டிஸ்கவரி சேனலில் வெளியானது.


வருகிற மார்ச் 23-ம் தேதி ரஜினிகாந்தின் காட்டுப்பயணம் டிஸ்கவரியில் ஒளிபரப்பாகும். இதையடுத்து பியர் க்ரில்ஸ் உடனான காட்டுப்பயணத்தில் இணையப்போகும் அடுத்த இந்திய நட்சத்திரம் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார்.

மேலும் பார்க்க: ‘தலைவி’ திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பூர்ணா..!
First published: February 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading