பத்மவிபூஷன் நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவில் க்ரியா யோகம் மற்றும் அதன் பயன்கள் குறித்தும் பரமஹம்ச யோகானந்தர் குறித்தும் தனது அனுபவங்களை மக்களிடத்தில் பகிர்ந்திருந்தார். அதில் அவர் பேசிய நிகழ்காலத்தில் வாழ்வது எப்படி எனும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இன்று ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கம் என்பதால் மாதத்தின் தொடக்கத்தை நிகழ்காலத்தில் வாழ்ந்து வாழுங்கள் என ரஜினி ரசிகர்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
அதில், நீங்கள் நன்றாக கவனித்தீர்கள் என்றால் உங்கள் மைண்ட் (Mind) ஒன்று எதிர்காலத்தில் இருக்கும். இல்லை இறந்த காலத்தில் இருக்கும். பயங்கர மான ஆள் அது. மைண்ட் (Mind) நிகழ்காலத்தில் இருக்காது. அதுவும் இறந்த காலத்தில் பார்த்தால் சந்தோஷமான விஷயங்களே இருக்காது. யார் யார் நம்மை திட்டினார்கள் , யார் யார் நம்மை காயப்படுத்தினார்கள் , யார் யார் நமக்கு ஆப்பு வைத்தார்கள் , இது பண்ணா நான் நல்லா இருப்பனா , அது பண்ணா நான் நல்லா இருப்பனா என சிந்தித்து கொண்டே இருக்கும். தவிர தற்காலத்தில் அது இருக்காது.
சரி எதிர் காலம் குறித்து உங்கள் மனமோ , மூளையோ சிந்திக்குமானால் அதில் கூட பயம் . ஐயோ இது இப்டி நடந்துருமோ , அது அப்டி போய்டுமோ , இது இப்டி ஆயிடுமோ என எதிர்காலத்திலும் பயத்திலேயே வாழ்வது. குழந்தைகள் பார்த்தால் அதனால் தான் அனைவருக்கும் பிடிக்கின்றது. ஏனெனில் அவர்கள் நிகழ்காலத்தில் வாழ்கின்றனர். என கூறியுள்ளார். இந்த வீடியோவை ரஜினி ரசிகர்கள் ட்விட்டரில் பகிர்ந்து நிகழ்காலத்தில் வாழுங்கள் என பதிவிட்டுள்ளனர்.
Published by:Sankaravadivoo G
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.