• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • நாளொன்றுக்கு 10 டன் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து தரமான துணிகளாக மாற்றி வரும் 17 வயது சிறுவன்!

நாளொன்றுக்கு 10 டன் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து தரமான துணிகளாக மாற்றி வரும் 17 வயது சிறுவன்!

பிளாஸ்டிக் கழிவுகளில் தரமான துணி

பிளாஸ்டிக் கழிவுகளில் தரமான துணி

வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் ஒத்துழைப்புடன் பில்வாராவில் உற்பத்தி யூனிட் அமைக்கப்பட்டது. பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு மறுசுழற்சி செய்து தயாரிக்கப்படும் துணியை Kanchan India Limited-ற்கு கொடுத்து வருகிறார் ஆதித்யா.

  • Share this:
கடந்த 2019 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் உள்ள நிலப்பரப்புகளில் சுமார் 3.3 மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததாக அறிக்கைகள் தெரிவித்தன. காற்று மாசுபாடு காரணமாக காலநிலை மாற்றம், கடும் சுவாச நோய்கள் உள்ளிட்ட பல சிக்கல்கள் உலகம் முழுவதும் எதிர்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்து வரும் தலைமுறயினருக்கு தேவையான சுற்றுச்சூழலை தருவது நமது கூட்டு பொறுப்பு. ஆனால் பலர் இதை உணர்வதில்லை.

இதனிடையே ராஜஸ்தானைச் சேர்ந்த 17 வயது சிறுவனான ஆதித்யா பங்கர், சுற்றுசூழலை மேம்படுத்த தன்னால் முடிந்த பெரிய அளவிலான பங்களிப்பை வழங்கி வருவது சுற்றுசூழல் ஆர்வலர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. சுற்றுசூழல் நன்மைக்கு பெரும் சவாலாக இருக்கும் பிளாஸ்டி கழிவுகள் மற்றும் குப்பைகளை குறைப்பதில் மிகவும் திறமையுடன் செயல்பட்டு வருகிறான் இந்த 17 வயது சிறுவன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் ஆதித்யா, டிராஷ் டு ட்ரெஷர் (trash To Treasure) என்ற நிறுவனத்தி நிறுவி, அதில் பிளாஸ்டிக் கழிவுகளை துணியாக மாற்றி வருவது கேள்விப்படுவோரை வியப்பில் ஆழ்த்துகிறது. Kanchan India Limited என்ற ஜவுளி உற்பத்தி வணிகத்தை நடத்தும் குடும்பத்தை சேர்ந்த சிறுவனான ஆதித்யா, பத்தாவது படிக்கும் போது தனது உறவினருடன் சீனாவிற்கு டூர் சென்றுள்ளான்

இந்த பயணமே தொழில் ரீதியானது தான் என்று குறிப்பிட்ட சிறுவன், "சீனாவின் ஓரிடத்தில் பெரிய அளவிலான பிளாஸ்டிக் கழிவுகளை துணியாகவும், நாம் அணிந்து கொள்ள கூடிய பொருட்களாக மாற்றுவதையும் பார்த்தேன். இந்த ப்ராசஸ் நிலத்தில் குவியும் குழுக்களை கழிவுகளை குறைப்பதோடு, சிறந்த தரமான பொருட்களை உற்பத்தி செய்ய முடியும் என்பதை எனக்கு உணர்த்தியது.

தவிர இந்த பிசினஸ் உள்ளூரில் உள்ளவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை வழங்குகிறது"என்று குறிப்பிட்டு இருக்கிறான். பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் வ்ரேப்பர்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்களை மறுசுழற்சி செய்து துணியாக மாற்றும் அற்புத பணியில் ஈடுபட்டு வருகிறது சிறுவனின் Trash To Treasure நிறுவனம். பிளாஸ்டிக் கழிவுகளை துணியாக மாற்றுவதற்கான ப்ராசஸிற்கு 1 அல்லது 2 நாட்கள் எடுக்கும்.

ஆனால் பிளாஸ்டிக் கழிவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் துணி வழக்கமான காட்டன் துணியை விட வலிமையானது மற்றும் அதிக நாட்கள் உழைக்க கூடியதாக இருக்கும் என்று சிறுவன் ஆதித்யா பாங்கர் கூறி இருக்கிறார். கடந்த ஜனவரி மாதம் துவக்கப்பட்ட Trash To Treasure நிறுவனத்தில் ஒவ்வொரு நாளும் துணி தயாரிக்க 10 டன் பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது.

Also read... கால்பந்து விளையாடிய கரடிகள்... ஒடிசாவில் நிகழ்ந்த வைரல் சம்பவம்!

பிளாஸ்டிக்கிலிருந்து துணி உற்பத்தி செய்யும் தொழிலைத் தொடங்குவது பற்றி தனது மாமா மற்றும் பெற்றோருடன் கலந்தாலோசித்த போது, நல்ல யோசனை என்று பாராட்டி ஊக்கமளித்ததாகவும், இந்த திட்டத்திற்கான நிதியை தனது குடும்ப நிறுவனமான Kanchan India Limited-ல் இருந்து பெற்றதாகவும் சிறுவன் ஆதித்யா கூறி இருக்கிறார். பின்னர் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் ஒத்துழைப்புடன் பில்வாராவில் உற்பத்தி யூனிட் அமைக்கப்பட்டது. பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு மறுசுழற்சி செய்து தயாரிக்கப்படும் துணியை Kanchan India Limited-ற்கு கொடுத்து வருகிறார் ஆதித்யா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: