பயிற்சி வகுப்பில் பாம்பு நடனமாடிய ஆசிரியை பணியிடை நீக்கம் - வைரலாகும் வீடியோ

பயிற்சி வகுப்பில் பாம்பு நடனமாடிய ஆசிரியை பணியிடை நீக்கம் - வைரலாகும் வீடியோ
நாகின்
  • Share this:
ராஜஸ்தான் மாநிலத்தில் பயிற்சி வகுப்பின் இடைவேளையின் போது அரசு ஆசிரியர்கள் நாகின் நடனமாடிய ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் பகுதியில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி வகுப்பின் இடைவேளையின் போது ஆசிரியை மற்றும் 2 ஆசிரியர்கள் பாம்பு போன்று நாகின் நடனமாடி உள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது. பயிற்சி வகுப்பில் அரசு ஆசிரியர்கள் நடனமாடியது குறித்து விசாரிக்க மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.


மேலும் நடனமாடிய ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆசிரியை உடன் நடனமாடிய 2 ஆசிரியர்கள் புதிதாக பணியில் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளனர்.இதனிடையே ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பயிற்சி வகுப்பின் இடைவேளையின் போது தானே அவர்கள் நடனமாடினார்கள் இதில் என்ன தவறு, இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஆசிரியைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
First published: November 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்