Home /News /trend /

எரியும் வீட்டில் இருந்து குழந்தையை பத்திரமாக மீட்ட காவலர் - குவியும் பாராட்டு.!

எரியும் வீட்டில் இருந்து குழந்தையை பத்திரமாக மீட்ட காவலர் - குவியும் பாராட்டு.!

Rajasthan Police

Rajasthan Police

Trending | தீ வைத்துக் கொளுத்தப்பட்ட வீடு ஒன்றில் இருந்து குழந்தையை காவலர் ஒருவர் மீட்டுக் கொண்டு வந்தார். குழந்தையை மீட்டுக் கொண்டு வந்த காவலர் நேத்ரேஷ் சர்மாவுக்கு 31 வயது ஆகிறது. அவரது துணிச்சலான செயலை பாராட்டி விருது வழங்க வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
ராஜஸ்தான் மாநிலம், கரௌலி மாவட்டத்தில் இரு தரப்பு மக்களிடையே கலவரம் வெடித்தது. அந்த கலவரத்தில் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட வீடு ஒன்றில் இருந்து குழந்தையை காவலர் ஒருவர் மீட்டுக் கொண்டு வந்தார். குழந்தையுடன் அவர் வெளியேறும் ஃபோட்டோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதற்காக அனைத்து தரப்பு மக்களிடம் இருந்தும் அவர் பாராட்டு பெற்று வருகிறார்.

கலவரக்காரர்கள் தீ வைத்த நிலையில், கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் நெருப்புக்கு இடையே கிடைத்த சின்ன இடைவெளியில் காவலர் நேத்ரேஷ் சர்மா உள்ளே புகுந்தார். தன்னைப் பற்றி கூட கவலைப்படாமல் தைரியமாக ஒரு குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்று, வீட்டில் சிக்கிக் கொண்டிருந்த குழந்தையை அவர் மீட்டு வந்தார்.

இதுகுறித்த ஃபோட்டோவை, காவல் கண்காணிப்பாளர் சுகிர்தி மாதவ், டிவிட்டரில் பகிர்ந்து கொண்டார். அவரது பதிவில், “ராஜஸ்தான் மாநில காவல் துறையில் பணியாற்றும் நேத்ரேஷ் சர்மா மூலமாக மதிப்புமிகுந்த ஒரு உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இது மிக பெருமையான விஷயம். ஆயிரம் வார்த்தைகளைக் கூறி பாராட்டினாலும் இதற்கு ஈடு ஆகாது’’ என்று கூறியுள்ளார்.



குழந்தையை மீட்டுக் கொண்டு வந்த காவலர் நேத்ரேஷ் சர்மாவுக்கு 31 வயது ஆகிறது. அவரது துணிச்சலான செயலை பாராட்டி விருது வழங்க வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து, ரோஹித் என்பவர் வெளியிட்டுள்ள பதிவில், “காவலர் நேத்ரேஷ் சர்மாவை பாருங்கள். அவரது வீர, தீர செயலுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட வேண்டும். எங்களைப் பாதுகாக்க உங்களைப் போன்ற காவலர்கள் இருப்பதால் தான் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.



கலவரத்தின் பின்னணி

முன்னதாக, ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை ஹிந்துக்களின் புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி கரௌலி நகரில் நடத்தப்பட்ட ஊர்வலமானது, இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியை கடந்து சென்ற போது, இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால், இரு தரப்பிலும் ஒருவரை, ஒருவர் தாக்கிக் கொண்டனர். சில வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Also Read : சொத்து தகராறில் மகனை உயிருடன் எரித்துக் கொன்ற தந்தை...

இதற்கிடையே, மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இதையொட்டி, தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வைத்திருக்கும் மாணவர்கள் மட்டுமே தேர்வு மையங்களுக்கு சென்று வரலாம் என்று காவல் துறை அனுமதி அளித்துள்ளது.



கலவரக்காரர்கள் கைது

கலவரம் தொடர்பாக 46 பேரை காவல் துறையினர் கைது செய்து, விசாரணை நடைபெற்று வருவதாக பரத்பூர் சரக காவல் ஆய்வாளர் பிரஷான் குமார் காமேஸ்ரா கூறினார். மொத்தம் 13 நபர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறியதாக 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Published by:Selvi M
First published:

Tags: Rajasthan, Trending

அடுத்த செய்தி