Home /News /trend /

முகூர்த்த நேரத்தில் குடித்து கும்மாளம் போட்ட மணமகன்...மணமகள் எடுத்த நச் முடிவு

முகூர்த்த நேரத்தில் குடித்து கும்மாளம் போட்ட மணமகன்...மணமகள் எடுத்த நச் முடிவு

 மணப்பெண்

மணப்பெண்

Viral | கல்யாணத்தை கூட மறந்து விட்டு மதுவில் மயங்கிக் கிடந்த மணமகனை ஏற்க மணமகள் தயாராக இல்லை.

    திருமணத்திற்கு முதல் நாள் மணமகன் சார்பில் தன் நண்பர்களுக்கு பேச்சிலர் பார்ட்டி கொடுப்பது இன்றைக்கு பெரும்பாலும் தவிர்க்க முடியாத நிகழ்வாக மாறி வருகிறது. பார்ட்டி என்றால் ஆடல், பாடல் எல்லாம் கிடையாது. நேரடியாக மது விருந்து தான். இதை செய்யாத மணமகன்களை இன்றைக்கு விரல் விட்டு எண்ணி விடலாம்.

    பள்ளி, கல்லூரி கால நண்பர்கள், அலுவலக நண்பர்கள் உள்பட பலரும் இந்த விருந்தில் கலந்து கொள்கின்றனர். அந்த சமயத்தில் மணமகனையும் கொஞ்சம் மது அருந்துமாறு நண்பர்கள் கட்டாயப்படுத்துவதும் வாடிக்கையானது. ஆனால், தனக்கு இருக்கும் பொறுப்பை உணர்ந்து அன்றைக்கு மது அருந்தாமல் வெளியேறும் மணமகன் குறித்து கவலையில்லை. அதே சமயம், தான் புது மாப்பிள்ளை என்பதைக் கூட மறந்து சிலர் குடித்துவிட்டு மூன்றாம் நபர் போல கலாட்டா செய்து கொண்டிருப்பார்கள்.

    மணமகன் அழைப்புக்கு வராமல் தாமதம்

    ராஜஸ்தான் மாநிலத்தின் சிரு மாவட்டத்தில் அண்மையில் இதுபோன்ற கலாட்டா சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதிகாலை 1.15 மணிக்கு முகூர்த்தம் குறிக்கப்பட்டு, திருமணம் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கு முன்னதாக இரவு 9 மணிக்கு மணமகள் வீட்டில் இருந்து மணமக்களின் வரவேற்பு ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    Also Read : வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை... ரிசல்ட்டை பார்த்து ஷாக்கான உலக நாடுகள்!

    மணப்பெண்ணின் வீடு அமைந்துள்ள செலீனா கிராமத்தில், விருந்தினர்கள் அனைவரும் மாப்பிள்ளையின் வருகைக்காக காத்திருந்தனர். ஆனால், அவரோ நண்பர்களுக்கு மது விருந்து கொடுப்பதில் பிஸியாக இருந்தார். இன்னும் சற்று நேரத்தில் வரவேற்பு ஊர்வலம், அதைத் தொடர்ந்து திருமணம் ஆகியவை நடைபெற இருப்பது குறித்து கொஞ்சமும் கவலைப்படாத மணமகன், மது அருந்திவிட்டு, டிஜே மியூஸிக் போட்டு நண்பர்களுடன் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தார்.

    முகூர்த்த நேரம் நெருங்கியும் வரவில்லை

    மணமகன் இப்போது வந்து விடுவார், இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவார் என பலவித கணக்குகளோடு காத்திருந்த மணப்பெண் வீட்டாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. குறிப்பாக, முகூர்த்த நேரம் தொடங்கும் வரையிலும் கூட மணமகனை ஆளே காணோம். இதனால், மணமகள் வீட்டார் வெறுப்படைந்த நிலையில் மீண்டும் வீட்டுக்கு திரும்பி விட்டனர்.

    வேறொருவரை திருமணம் செய்ய முடிவு

    கல்யாணத்தை கூட மறந்து விட்டு மதுவில் மயங்கிக் கிடந்த மணமகனை ஏற்க மணமகள் தயாராக இல்லை. இனி வேறொரு நபரை திருமணம் செய்து கொள்ளலாம் என்று அவர் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். இதனால், அதிர்ச்சி அடைந்த மணமகன் வீட்டார், மணமகள் குடும்பத்தினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    ஆனால், மணமகனும், அவரது குடும்பத்தினரும் திருமண சடங்குகள் குறித்து வேண்டுமென்றே அலட்சியம் காட்டியதாக மணமகள் வீட்டார் பதிலடி கொடுத்தனர். இதனால், இருதரப்பு கசப்புகள் காரணமாக திருமணத்தை நிறுத்திக் கொள்கிறோம் என்று இரு வீட்டாரும் காவல் நிலையத்தில் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு நடையை கட்டினர்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Trends, Viral

    அடுத்த செய்தி