அதிரடி காட்டிய பட்லர்..! 2-வது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான்

ராஜஸ்தான் அணியில் அதிரடியாக விளையாடிய ஜாஸ் பட்லர் 89 ரன்கள் விளாசினார்.

அதிரடி காட்டிய பட்லர்..! 2-வது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லர்.
  • News18
  • Last Updated: April 23, 2019, 11:48 AM IST
  • Share this:
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

மும்பை - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்தது ராஜஸ்தான் அணி.

மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா, டி காக் அந்த அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். ரோஹித் சர்மா 47 ரன்களுக்கும், டி காக் 81 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்களை எடுத்தது. ராஜஸ்தான் அணி சார்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும், குல்கர்னி, உனத்கட் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.


188 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ராஜஸ்தான் அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்த அணியின் ரஹானே 37 ரன்களுக்கும், சாம்சன் 31 ரன்களுக்கும் ஆட்டமிழக்க அதிரடியாக விளையாடிய ஜாஸ் பட்லர் 89 ரன்கள் விளாசினார்.இறுதியில் ராஜஸ்தான் அணி 19.3 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.  மும்பை அணி சார்பில் குருணல் பாண்டியா 3 விக்கெட்டுகளையும்,  பும்ரா 2 விக்கெட்டுகளையும், சாஹர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது.

கிரிக்கெட் விளையாடாமல் ஃபுட் பால் விளையாடிய ரோஹித் சர்மா! வைரல் வீடியோ

Also watch


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading