• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • ரயில்வேயின் முதல் அக்வாட்டிக் பூங்கா - பெங்களூரு ரயில் நிலையத்தில் 12 அடி நீள சுரங்கப்பாதை!

ரயில்வேயின் முதல் அக்வாட்டிக் பூங்கா - பெங்களூரு ரயில் நிலையத்தில் 12 அடி நீள சுரங்கப்பாதை!

ரயில்வேயின் முதல் அக்வாட்டிக் பூங்கா

ரயில்வேயின் முதல் அக்வாட்டிக் பூங்கா

பொது மக்களுக்கு மறக்கமுடியாத அனுபவத்தை வழங்குவதற்கும், அவர்கள் ரயில்நிலைய நடைமேடையில் காத்திருக்கும் நேரத்தை மகிழ்ச்சியாக செலவழிப்பதற்கும், ISRDC எச்.என்.ஐ அக்வாட்டிக் கிங்டம் உடன் இணைந்து, ரயில்வேயின் முதல் நகரும் நன்னீர் சுரங்க அக்வாரியத்தை உருவாக்கியுள்ளது.

  • Share this:
HNI அக்வாட்டிக் கிங்டம் உடன் இணைந்து, IRSDC, ரயில்வேயின் முதல், நகரக்கூடிய நன்னீர் சுரங்கப்பாதை அக்வாரியத்தை நிறுவுகிறது. இது ரயில்வேயின் முதல் நீர்வாழ் பூங்கா என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு, கே.எஸ்.ஆர் ரயில்நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளின் கண்களுக்கும் மனதுக்கும் விருந்தாக ஒரு பொழுதுபோக்கு நிறுவப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கு மறக்கமுடியாத அனுபவத்தை வழங்குவதற்கும், அவர்கள் ரயில்நிலைய நடைமேடையில் காத்திருக்கும் நேரத்தை மகிழ்ச்சியாக செலவழிப்பதற்கும், ISRDC (இந்திய ரயில் நிலையங்கள் மேம்பாட்டுக் கழகம்), எச்.என்.ஐ அக்வாட்டிக் கிங்டம் உடன் இணைந்து, ரயில்வேயின் முதல் நகரும் நன்னீர் சுரங்க அக்வாரியத்தை உருவாக்கியுள்ளது. பெங்களூரு கே.எஸ்.ஆர் ரயில் நிலையத்தில் ஜூலை 1ம் தேதி இந்த அக்வாட்டிக் பூங்கா திறக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

HNI அக்வாடிக் கிங்டம்மின் நியாஸ் அகமது குரேஷி என்.டி.டி.வி- யுடன் பேசிய போது, இந்த திட்டம் பற்றி விவரித்தார். இதிலிருக்கும் மீன்களும், மற்ற நீர்வாழ் உயிரினங்களும், இந்த அக்வாரியத்துக்காக நீண்ட தூரம் பயணித்துள்ளன. தற்போதைய லாட்டுகளில் இருக்கும் 120 வகையான மீன்களில் பெரும்பாலானவை வெளியில் இருந்து, நம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. கடந்த ஆண்டு நவம்பரில், இந்த திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன.

இந்த அக்வாரியத்துக்கு நன்னீரை விட உப்புநீரைப் பயன்படுத்தலாம் என்று முதலில் கருதப்பட்டது. மேலும், அமேசான் காடுகள் நதி காட்சியை இதன் பின்னணியில் காணலாம். பிரத்யேகமாக உருவக்கப்பட்ட செக்மென்ட் மற்றும் ஒரு சுரங்கப்பாதை அக்வாரியமும் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும். ரயில்வே மூலம் கிராமப்புற இந்தியாவையும் கவர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது, எனவே, அக்வாரியம் சுரங்கப்பாதையில் நுழைவதற்கான கட்டணம் கட்டணமாக ரூ.25 என்ற அளவிலேயே வைக்கப்பட்டுள்ளது.

Also read... உலகிலேயே அதிக எடையுள்ள அம்ராபுரி மாம்பழங்களை வளர்க்கும் மத்தியபிரதேச சகோதரர்கள்!

ஐ.ஆர்.எஸ்.டி.சியின் நோடல் அதிகாரி சௌரப் ஜெயின், ரயில்வே சார்பாக என்.டி.டி.வி- யிடம் பேசினார். அக்வாட்டிக் பூங்கா அமைத்திருப்பது, ரயில் நிலையங்கள் எவ்வாறு உணரப்படுகின்றன என்பதை மாற்றுவதற்கான தொடங்கப்பட்ட முயற்சி. அவர்கள் அதை யூடியூபில் பார்த்து, ஒரு ரயில் நிலையத்தில் இதேபோன்ற ஒன்றை உருவாக்க முடியுமா என்று ஆலோசிக்க நிறுவனத்தை அணுகினர். “இது ரயிலுக்காகக் காத்திருக்கும்போது மக்களும் குழந்தைகளும் மிகவும் ரசிக்கக்கூடியது.

வெளியாட்களைக் கூட இது ஈர்க்கும் இருக்கும்" என்று ஜெயின் கூறியதாக செய்தி வெளியிடப்பட்டது. IRSDC இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி நிர்வாகியான எஸ்கே லோஹயா, "இது விமான நிலையங்களுக்கு இணையாக ரயில் நிலையங்களையும் மேம்படுத்தும் ஒரு முயற்சி. மேலும், எங்களின் சிறப்பான வசதி மேம்பாட்டு தொடக்கத் திட்டங்களில், பயணிகளின் மகிழ்ச்சியை அதிகரிப்பதில் ஈடுபட்டுள்ளோம்” தெரிவித்ததாக IANS செய்தி வெளியிட்டது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: