ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ரயிலுக்கு வாட்டர் வாஷ்.. பயணிகளை குளிப்பாட்டிய ரயில்வே பைப்.. வைரல் வீடியோ!

ரயிலுக்கு வாட்டர் வாஷ்.. பயணிகளை குளிப்பாட்டிய ரயில்வே பைப்.. வைரல் வீடியோ!

சிரிப்பு கன்ஃபார்ம்..வைரலாகும்வீடியோ..

சிரிப்பு கன்ஃபார்ம்..வைரலாகும்வீடியோ..

30 செகண்டுகள் ஓடும் அந்த வீடியோவில், ரயில் நிலையத்தின் பிளாட்பார்மிற்கு அருகில் இருக்கும் குடிநீர் குழாய் ஒன்று உடைந்து, அதிலிருந்து தண்ணீர் பீய்ச்சு அடித்துக் கொண்டிருக்கிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இணையத்தில் தினந்தோறும் பல்வேறு விதமான சிரிப்பூட்டும் வீடியோக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. சில வீடியோக்கள் வேடிக்கையாகவும், சில நம்மை சிந்திக்க வைக்கும் படியும் இருக்கும். அது போன்றதொரு வீடியோ தான் ட்விட்டரில் பதிவிடப்பட்டு தற்பொழுது வைரலாகி வருகிறது.

  அபி என்பவர் பதிவிட்ட 30 செகண்டுகள் ஓடும் அந்த வீடியோவில், ரயில் நிலையத்தின் பிளாட்பார்மிற்கு அருகில் இருக்கும் குடிநீர் குழாய் ஒன்று உடைந்து, அதிலிருந்து தண்ணீர் பீய்ச்சு அடித்துக் கொண்டிருக்கிறது. இதில் என்ன வேடிக்கை இருக்கிறது என்று கேட்கிறீர்களா? இங்கு தான் இருக்கிறது ட்விஸ்ட்! குடிநீர் குழாயிலிருந்து பீய்ச்சி அடிக்கும் தண்ணீரானது ரயில் வரும் பிளாட்பார்மை நோக்கி தண்ணீரை தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறது. குழாய் உடைந்து அதிலிருந்து வரும் நீரானது, ரயிலின் ஜன்னல் வழியாக பாய்ந்து உள்ளிருக்கும் பயணிகளை குளிப்பாட்டுகிறது.

  சாதாரணமாக இது போன்ற சம்பவத்தை பார்த்தாலே நமக்கெல்லாம் அடக்க முடியாத படி சிரிப்பு வந்துவிடும். அதிலும் வீடியோவை பதிவிட்ட அந்த நபர், வீடியோவில் ஹிந்தி பாடல் ஒன்றை பின்னணியில் சேர்த்து, சரியாக ரயில் வந்து நிற்கும் நேரத்தில் பயணிகளின் மீது தண்ணீர் படும் போது அந்த பாடல் சரியானதொரு தொனியில் ஒலிக்கிறது.

  Read More : ”லேப்டாப் அழுக்காக இருக்குப்பா” தண்ணீர் ஊற்றி கழுவிய சிறுமி - வீடியோ இணையத்தில் வைரல்!

  மேலும் அந்த வீடியோவை பதிவிட்டு அதனோடு அவர் சேர்த்துள்ள “உங்களுக்கான இந்திய ரயில்வேயின் சேவை” என்ற வாசகம் இன்னும் சிரிப்பை வர வைக்கிறது.இந்த வீடியோவை பார்த்துவிட்டு சிரிப்பை அடக்க முடியாத இணையவாசிகள் பலரும் கமெண்ட் பகுதியில், தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.கேளிக்கை, ட்விட்டர்

  அதில் ஒருவர் “ஹோலி பண்டிகைக்கான கொண்டாட்டம்” எனவும், மற்றொருவர் “இந்த வீடியோவை எடுத்த நேரத்தில், அந்த குடிநீர் குழாயை சரி செய்து குடிநீர் வீணாவதை தவிர்த்திருக்கலாம்” என்று மற்றொருவரும், “இந்திய ரயில்வே என்ன செய்து கொண்டிருக்கிறது? இதற்கு பொறுப்பான அதிகாரிகள் எங்கே? என ஆவேசத்துடன் மூன்றாவது நபரும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

  மேலும் பலர், பொதுமக்கள் கொஞ்சமாவது பொறுப்புடன் நடந்து பொது சொத்துக்களை பாதுகாப்புடன் கையாள வேண்டும் என்றும், பதிவிட்டுள்ளனர். இது பார்ப்பதற்கு நகைச்சுவையாக உள்ளது. ஆனால் அதில் யோசிக்க கூடிய ஒரு விஷயமும் உள்ளது. நம்முடைய மக்கள்தான் அந்த குழாயில் இந்த நிலைமைக்கு காரணம் அந்த குழாய் பழுதானதற்கு மொத்த பொறுப்பும் அவர்கள் தான்” என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

  இவ்வாறு பலதரப்பட்ட கருத்துக்கள் வந்து வந்த வண்ணம் இருக்க, அக்கரையாக அறிவுரை கூறிய பலரை பூமர்கள் என்று சில குறும்புக்கார நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Trending, Viral