மனநலம் பாதித்த பெண்ணை கடுமையாகத் தாக்கிய ஆயுதப்படை காவலர்... மண்டை உடைந்து ரத்தம் கொட்டிய பரிதாபம்

மனநலம் பாதித்த பெண்ணை கடுமையாகத் தாக்கிய ஆயுதப்படை காவலர்... மண்டை உடைந்து ரத்தம் கொட்டிய பரிதாபம்
  • Share this:
மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் சுற்றித் திரிந்த மனநலம் பாதித்த பெண்ணை ரயில்வே ஆயுதப்படை காவலர் கடுமையாகத் தாக்கியதால் மண்டை உடைந்து ரத்தம் கொட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் மனநலம் பாதித்த பெண் ஒருவர் சுற்றித்திரிந்து உள்ளார். அவரை ரயில்வே நிலையத்தில் இருந்து வெளியேற்ற ஆயுதப்படை காவலர்கள் இரவு நேரத்தில் முயற்சி செய்தனர்.

ஆனால் மீண்டும் மீண்டும் ரயில்வே நிலையத்திற்கு உள்ளேயே அந்தப் பெண் சென்றதால் ஆயுதப் படையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற காவலர் கையில் இருந்த லத்தியால் அந்தப் பெண்ணை சரமாரியாக தாக்கினார்.
இதில் அந்தப் பெண்ணின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதைப் பார்த்த பொதுமக்கள் காவலரிடம் வாக்குவாதம் செய்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மனநலம் பாதித்த பெண்ணை அரசு காப்பகத்தில் சேர்க்க முயற்சி செய்யாமல் காவலர் கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
First published: March 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading