Fact Check : எழும்பூர் ரயில் நிலையத்தில் கழிவறைக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் பாலில் கலக்கப்பட்டதா..?

ரயிலில் உள்ள டாய்லெட்டில் இருந்து தண்ணீரை பிடித்து பாலில் ஊற்றுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது

Fact Check : எழும்பூர் ரயில் நிலையத்தில் கழிவறைக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் பாலில் கலக்கப்பட்டதா..?
ரயில்
  • Share this:
ரயிலில் பயன்படுத்தப்படும் டாய்லெட் தண்ணீரை கடைக்காரர் ஒருவர் பாலுடன் கலந்த வீடியோ சமூகவலை தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ குறித்து ரயில்வே நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் டீக்கடை வைத்திருக்கும் நபர் ஒருவர் ரயிலில் உள்ள டாய்லெட்டில் இருந்து தண்ணீரை பிடித்து பாலில் ஊற்றுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மைப் பிரிவு தலைவர் அஸ்லம் பாஷா தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பிளாட் பார்ம் எண் 7-ல் இரவு 9.25 மணி அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் ஒரு நபர் பாலில் ரயில் கழிவறை தண்ணீரை பிடித்து கலப்பதாகவும் பதிவிட்டிருந்தார். விழிப்புடன் இருங்கள். கவனமாக இருங்கள் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.


இந்நிலையில் இதற்கு பதில் அளித்த சென்னை ரயில்வே மேலாளர் தனது ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார். அந்த பதிவில், இது குறித்த புகார் வந்த பொழுதே கடையை தற்காலிகமாக மூட உத்தரவிட்டதாகவும், கடைக்காரர் தண்ணீரை பாலில் ஊற்றவில்லை பாய்லரில் தான் ஊற்றியதாகவும், பாலில் அந்த தண்ணீர் கலக்க வாய்ப்பு இல்லை எனவும் பதில் அளித்துள்ளார்

Also see ரொம்ப கோவக்கார யானையா இருக்குமோ... ட்ரக்கை ஓட ஓட துரத்தும் யானை! - வீடியோ
First published: January 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்