Home /News /trend /

என்ன ஸ்பீடு! மின்னல் வேகத்தில் ரயில் டிக்கெட் கொடுத்து அசர வைக்கும் முதியவர்

என்ன ஸ்பீடு! மின்னல் வேகத்தில் ரயில் டிக்கெட் கொடுத்து அசர வைக்கும் முதியவர்

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

15 விநாடிகளில் 3 பேருக்கு டிக்கெட் கொடுத்தும் அசத்தும் ரயில்வே ஊழியரின் வீடியோ சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வரும் நிலையில், அவர் யார் என்ற தகவலை ட்விட்டர் யூஸர் ஒருவர் பகிர்ந்துள்ளார். 

இந்தியாவில் அதிகமான பணியாளர்களைக் கொண்ட மிகப்பெரிய நெட்வொர்க்காக ரயில்வே உள்ளது. மேலும் இது நம் நாட்டின் பிரதான போக்குவரத்து என்பதால் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் மாநிலம் விட்டு மாநிலம், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பயணிக்கின்றனர். அதுவும் இல்லாமல் ரயில் பயணம் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. ஆனால் ரயிலில் டிக்கெட் எடுப்பதற்காக ஆன்லைனுக்கு சென்றாலும், டிக்கெட் கவுண்டர்களுக்குச் சென்றாலும் மணிக்கணக்கில் காக்க வைப்பது தான் கடுப்பாக இருக்கும். ‘வேகமாக பயணிப்பதற்காக மக்கள் நாடும் ரயில்வேயில் ஸ்பீடாக டிக்கெட் கொடுக்க ஆளே இல்லையா?’ என புலம்பி வந்தவர்களுக்கு, செம்ம சர்ப்ரைஸ் ஆன வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

பரபரப்பான ரயில் நிலையத்தில் ரயிலை தவறவிடாமல் டிக்கெட் வாங்குவதற்காக நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகளின் அலைக்கழிப்பை நாம் அனைவரும் அனுபவித்திருப்போம். இதனை குறைப்பதற்காகவே இந்தியன் ரயில்வே பெரும்பாலான ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்கள் (ஏடிவிஎம்) அமைத்துள்ளது. மேலும் அதிலிருந்து டிக்கெட் பெற உதவுவதற்காக ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களையும் பணிக்கு அமர்த்தியுள்ளது.

டிக்கெட் கவுண்டரில் இருப்பவர்களே வேகமாக இல்லை, இந்த வயதான ஓய்வு பெற்ற ஊழியர்கள் எப்படி இயந்திரத்தில் இருந்து வேகமாக டிக்கெட் எடுத்து கொடுப்பார்கள் என்ற பலரது எண்ணத்தையும், இந்தியன் ரயில்வேவை சேர்ந்த மூத்த பணியாளர் ஒருவர் தவிடுபொடியாக்கியுள்ளார். ஆம், இவர் டிக்கெட் கொடுக்கும் இயந்திரத்திற்கு சென்றால் உங்களுக்கு மட்டுமல்ல, மேலும் 2 பேருக்கும் சேர்த்து 15 விநாடிகளில் டிக்கெட் கிடைத்துவிடுமாம். என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா?.. இதே ஆச்சர்யத்துடன் தான் இணையத்தில் அந்த ஊழியர் டிக்கெட் கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

மும்பை ரயில்வே யூசர்ஸ் என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரம் முன்பு நிற்கும் வயதான ரயில்வே ஊழியர் ஒருவர் கண் இமைக்கும் நேரத்தில் கடகடவென இயந்திரத்தின் ஸ்கிரீனில் தோன்றும் ஆப்ஷன்களை தட்டுகிறார். அதை விட மின்னல் வேகத்தில் இயந்திரத்தில் இருந்து டிக்கெட்டை கலெக்ட் செய்து பயணிகள் கையில் திணித்துவிட்டு, அடுத்த பயணிக்கான டிக்கெட்டை எடுப்பதில் தீவிரமாக செயல்படுகிறார். மேலும் இடை, இடையே பயணிகள் கேட்கும் சந்தேகங்களுக்கும் தமிழில் சிரித்த முகத்துடன் பதிலளிக்கிறார்”


 also read : 27 ஆண்டுகளாக ஒருமுறை கூட விடுப்பு எடுக்காத ஊழியருக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி!

இப்படி மிக வேகமாக 15 விநாடிகளில் 3 பேருக்கு டிக்கெட் கொடுப்பதாக அந்த ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. காண்போர் கண்களை மிரட்சியில் ஆழ்த்தும் இந்த வீடியோவை இதுவரை 9 லட்சத்து 58 ஆயிரத்து 500 பேர் பார்த்துள்ளனர். 34 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளையும், 4 ஆயிரத்திற்கும் அதிகமான பகிர்வுகளையும் பெற்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்த ட்விட்டரைப் பார்த்த யூஸர்களில் ஒருவர் வீடியோவில் இருப்பவர் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் என அடையாளம் காட்டியுள்ளார். “இந்த ரயில்வே ஓய்வு பெற்ற ஜென்டில்மேன் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பணிபுரிகிறார்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Viral Video

அடுத்த செய்தி