ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

தாய் பாசத்தில் ராகுலை மிஞ்ச ஆளே இல்லை - காங்கிரஸ் யாத்திரையில் நெகிழ்ச்சி சம்பவம்!

தாய் பாசத்தில் ராகுலை மிஞ்ச ஆளே இல்லை - காங்கிரஸ் யாத்திரையில் நெகிழ்ச்சி சம்பவம்!

சோனியா காந்தி ஷூ லேஸை கட்டிய ராகுல்

சோனியா காந்தி ஷூ லேஸை கட்டிய ராகுல்

யாத்திரையின்போது சோனியா காந்தியின் ஷூ லேஸ் அவிழ்ந்திருந்தது. இதனை கவனித்த ராகுல், உடனே தனது தாயின் ஷூ லேஸை கட்டிவிட்டார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Karnataka, India

  காங்கிரஸின் இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது, ராகுல் தனது தாய் சோனியா காந்திக்கு ஷூ லேஸ் கட்டிவிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

  விலைவாசி உயர்வு மற்றும் மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கை உள்ளிட்டவற்றுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் செப்டம்பர் 7 ம் தேதி இந்திய ஒற்றுமை யாத்திரை தொடங்கப்பட்து. கன்னியாகுமரியில் தொடங்கிய யாத்திரை, கேரளா வழியாக கர்நாடகாவை அடைந்தது.

  யாத்திரையில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உடல்நல பிரச்னை காரணமாக, வெளிநாடு சென்று சிகிச்சை மேற்கொண்ட காரணத்தால் அவரால் இந்த யாத்திரையில் பங்கேற்க முடியாது சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் உடல் நலம் தேரிய அவர் இன்று யாத்திரையில் பங்கேற்றார்.

  இதையும் வாசிக்க: கேரளாவில் பள்ளி சுற்றுலா பேருந்து விபத்து.. மாணவர்கள் உள்பட 9 பேர் பலியான சோகம்

  யாத்திரையின்போது சோனியா காந்தியின் ஷூ லேஸ் அவிழ்ந்திருந்தது. இதனை கவனித்த ராகுல், உடனே தனது தாயின் ஷூ லேஸை கட்டிவிட்டார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

  பின்னர் சிறிது நேரம் நடந்த பின், சோனியா காந்தியிடம், “நீங்கள் நடந்தது போதும். காரில் வாங்க” என ராகுல் கூறியுள்ளார். ஆனால் தான் நடக்கப்போவதாக சோனியா குறிப்பிட்டார். அதனை மறுத்த ராகுல் தனது தாயை காரில் வற்புறுத்தி ஏற சொன்னார்.

  ராகுலின் தாய் பாசத்தை கண்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் நெகிழ்ச்சி அடைந்தனர்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Congress, Rahul gandhi, Sonia Gandhi