வெங்கா..யம்.. தயிர்ர்ர்.. யூடியூப் சேனலில் 'காளான் பிரியாணி’ சமைத்து சாப்பிடும் ராகுல்காந்தி..

Youtube Video

Village Cooking Channel | Rahul Gandhi | யூடியூப் சேனல் நடத்துபவர்கள் பாணியிலேயே சமையல் பொருட்களின் பெயரை அழகுத் தமிழில் உரக்கப் பேசியதுடன், அவர்களது சமையலுக்கும் உதவி அசத்தினார்.

 • Share this:
  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழகத்தை சேர்ந்த யூடியூப் சேனல் ஒன்றில் சமைத்து உணவருந்தி மகிழ்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

  கடந்த வாரம் தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வந்திருந்த ராகுல் காந்தி, திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட 5 மாவடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதனிடையே, அப்பகுதியில் Village cooking எனப்படும் யுடூயூப் சேனலின் சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்று, அந்த குழுவினருடன் கலந்துரையாடினார்.  மேலும், அவர்களது பாணியிலேயே பொருட்களின் பெயரை அழகுத் தமிழில் உரக்கப் பேசியதுடன், அவர்களது சமையலுக்கும் உதவி அசத்தினார்.

  ட்ரெண்டிங் வீடியோக்களுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
  Published by:Yuvaraj V
  First published: