சிறுவனை மடியில் உட்கார வைத்து கொஞ்சி விளையாடிய ராகுல் காந்தி - வைரலாகும் வீடியோ

சிறுவனை மடியில் உட்கார வைத்து கொஞ்சி விளையாடிய ராகுல் காந்தி - வைரலாகும் வீடியோ
ராகுல் காந்தி
  • News18
  • Last Updated: December 7, 2019, 11:03 AM IST
  • Share this:
கேரள மாநிலம் வயநாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நிகழ்ச்சி ஒன்றில் சிறுவனை தனது மடியில் உட்கார வைத்து கொஞ்சி விளையாடிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது தொகுதியான வயநாட்டில் சில நாட்களாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

பள்ளி நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் என்று அவர் கலந்துகொண்டு வருகிறார். சில வாரங்களுக்கு முன்னர் பள்ளியில் பாம்பு கடித்து உயிரிழந்த சிறுமியின் வீட்டுக்குச் சென்ற அவர், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.


நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சிறுவன் ஒருவனை தனது மடியில் உட்கார வைத்து அவர் கொஞ்சி விளையாடினார். அந்த சிறுவனும் ராகுல் காந்தியின் முகத்தை பிடித்துப் பார்த்து விளையாடினான்.

இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.மேலும் சில நாட்கள் அவர் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்று கட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

வயநாட்டில் ராகுல் காந்தி புகைப்படங்கள்:


First published: December 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading