Rabindranath Tagore 160th Birthday : ட்விட்டரில் வலம்வரும் ரவீந்திரநாத் தாகூரின் கவிதைகளும், அரிய புகைப்படங்களும்!!

தாகூர்

தாகூர் 1861-ம் ஆண்டு மே மாதம் 7-ந்தேதி கொல்கத்தாவில் பிறந்தார். தனக்கு 8 வயது இருக்கும் போதே கவிதை எழுதுவதில் ஆர்வம் காட்டினார்.

  • Share this:
கவிஞர், இசையமைப்பாளர், எழுத்தாளர், கல்வியாளர் என பன்முகம் கொண்டவரும், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசிரியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரருமான ரவீந்திரநாத் தாகூரின் 160வது பிறந்தநாள் கடந்த மே7ம் தேதி கொண்டாடப்பட்டது.

தாகூர் 1861-ம் ஆண்டு மே மாதம் 7-ந்தேதி கொல்கத்தாவில் பிறந்தார். தனக்கு 8 வயது இருக்கும் போதே கவிதை எழுதுவதில் ஆர்வம் காட்டினார். பதினாறாவது வயதில் இவரது முதலாவது குறிப்பிடத்தக்க கவிதையை பானுசிங்கோ (சூரிய சிங்கம்) என்னும் புனை பெயரில் வெளியிட்டார். 1877-ம் ஆண்டில் இவரது முதல் சிறுகதையும், நாடகமும் வெளிவந்தன. தாகூர் பிரித்தானிய அரசை எதிர்த்து நாட்டின் விடுதலையை ஆதரித்தார்.

மேலும், இயற்கைக்கும் இறைவனுக்குமான தொடர்பை மனித சமுதாயத்தின் வழியே விளக்கும் வகையில் அவர் எழுதிய கீதாஞ்சலி கவிதை தொகுப்பை 1910 ம் ஆண்டு வெளியிட்டார். கீதாஞ்சலி கவிதை தொகுப்பிற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைக்கவே, பெங்காலியில் எழுதியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த கீதாஞ்சலி தான், 1913ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றது. இதன் மூலம் நோபல் பரிசு வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

 

 



 

 

 



 

குறிப்பாக நாட்டிற்காக ஜனகனமன என்ற கீதத்தை இயற்றியதன் மூலம் இந்திய தேசிய கீதத்தின் தந்தை என்று அழைக்கப்பட்டார். இதேபோல் பங்களாதேஷின்‘அமர் சோனா பங்களா’தேசிய கீதம், இலங்கையின் தேசிய கீதமும் தாகூரின் கவிதையை அடிப்படையாக கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 2 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை எழுதிய இவர் 1941-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி காலமானார். இந்த நிலையில் மேற்குவங்கத்தில் இவரது பிறந்தநாள் வெகு விமர்சையாக நடைபெறும்.

 

 



 

 



 

 



 

 

 



 

இவரது பிறந்தநாளின் போது தான் பங்களா நாட்காட்டியின் படி பைசாக் பண்டிகை கொண்டாடப்படுகிறது. எனவே ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்தநாள் தாகூர் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் தாகூர் கவிதைகள், ரன்பீந்திரசங்கீத் ஆகியவயற்றை உள்ளடக்கிய இசை நிகழ்ச்சிகள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆனால், கோவிட் -19 தொற்றுநோயின் இரண்டாவது அலையால் போடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, பொது கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டன.

 

 



 

 

 



 

இந்த நிலையில் தாகூரின் பெருமையை நினைவுக்கூரும் வகையில் கடந்த ஒரு வாரமாக அவரது கவிதைகளும், மகாத்மா காந்தி உள்ளிட்ட தேச தலைவர்களுடன் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படங்களும் ட்விட்டரில் வைரலாக தொடங்கியுள்ளன.

தாகூரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதையை செலுத்தும் வகையில் "தி நோபல் ப்ரைஸ்" தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவரின் அறிய புகைப்படங்களை பதிவிட்டது. அதேபோல இந்தியன்ஹிஸ்டரிபிக்ஸ் உள்ளிட்ட பல அமைப்புகள் பதிவுகளை வெளியிட்டுள்ளன.
Published by:Sankaravadivoo G
First published: