முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / கரும்பு தோட்டம் அருகே காரை நிறுத்திய விவசாயி... திரும்பி வந்து பார்த்த போது காத்திருந்த மலைக்க வைக்கும் அதிர்ச்சி! (வீடியோ)

கரும்பு தோட்டம் அருகே காரை நிறுத்திய விவசாயி... திரும்பி வந்து பார்த்த போது காத்திருந்த மலைக்க வைக்கும் அதிர்ச்சி! (வீடியோ)

பெட்ரோல் டேங்கில் புகுந்த மலைப்பாம்பு

பெட்ரோல் டேங்கில் புகுந்த மலைப்பாம்பு

தாய்லாந்தில் கரும்புத் தோட்டத்தில் காரை நிறுத்திவிட்டுச் சென்ற விவசாயிக்கு திரும்பு வந்து பார்த்த போது பேரதிர்ச்சி காத்திருந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தாய்லாந்தில் காரின் பெட்ரோல் டேங்கில் மலை பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. க்ளோங் யாங் எனும் கிராமத்தில் விவசாயி ஒருவர் தனது காரை கரும்பு தோட்டம் ஒன்றின் அருகே நிறுத்திவிட்டு சென்றிருக்கிறார். திரும்பி வந்து பார்த்த போது மலைப்பாம்பு ஒன்று காரின் மேற்பகுதியில் மெதுவாக ஊர்ந்து சென்று உள்ளது. அதனை பார்த்த அவர் உடனடியாக கார் கதவுகளில் உள்ள கண்ணாடி ஜன்னல்களை மூடியுள்ளார். 

ஆனால் அந்த மலைப்பாம்பு காரின் பெட்ரோல் டேங்கிற்குள் புகுந்துகொண்டது. அதன்பிறகு நீண்ட நேரமாக போராடி மலைப்பாம்பை வெளியே எடுத்தனர்.

' isDesktop="true" id="441825" youtubeid="BwbxycLpq2A" category="trend">

இதே போல் கடந்த ஆண்டு ஆக்ராவில் காருக்குள் 4 அடி நீள மலைப்பாம்பு இருப்பதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்த நிலையில், வனவிலங்கு ஆர்வலர்கள் பத்திரமாக மீட்டனர்.

உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவின் எல்.ஐ.சி காலணி பகுதியில் குருமீத்சிங் என்பவர் வசித்து வருகிறார். தன் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த ஹூண்டாய் காரின் முன்பகுதியில் ஏதோ வித்தியாசமாக சத்தம் எழுவதைக் கேட்டு அருகில் சென்று பார்த்துள்ளார். அப்போது, முன்பகுதியில் இருக்கும் bonnet -ஐ திறந்து பார்க்கும்போது 4 அடி நீள மலைப்பாம்பு ஒன்று மிகவும் குறுகலான கம்பிகளுக்கு இடையே இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர், அருகில் இருந்த வனவிலங்குகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு அவர் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து உடனடியாக அங்கு வந்த வனவிலங்கு ஆர்வலர்கள், காருக்குள் சிக்கியிருந்த 4 அடி நீள பாம்பை பத்திரமாக மீட்டு, வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

First published:

Tags: Animals, Python, Viral Video