மலைப்பாம்பு சிறுத்தையை விழுங்க சண்டையிடும் காட்சி.. ஆனால் நடந்தது... வைரல் வீடியோ..!

60 நொடிகள் நடைபெற்ற இந்த சண்டைக் காட்சி இதுவரை யாரும் எடுத்திராத சிலிர்க்க வைக்கும் காட்சி என்று கூறப்படுகிறது.

மலைப்பாம்பு சிறுத்தையை விழுங்க சண்டையிடும் காட்சி.. ஆனால் நடந்தது... வைரல் வீடியோ..!
மலைப்பாம்பு சிறுத்தையை விழுங்க சண்டையிடும் காட்சி
  • News18
  • Last Updated: November 21, 2019, 11:36 AM IST
  • Share this:
கென்யாவில் வன விலங்குகள் பூங்கா ஒன்றில் சிறுத்தையும் மலைப்பாம்பும் சண்டையிடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

கென்யாவின் சஃபாரி பூங்காவில் சிறுத்தை ஒன்றை மலைப்பாம்பு விழுங்க நினைத்த நிலையில், அதனிடமிருந்து தப்பிப்பதற்காக சிறுத்தை சண்டை போடும் காட்சியை புகைப்படக்கலைஞர் மைக் வெல்டன் என்பவர் படம்பிடித்துள்ளார். சுமார் 60 நொடிகள் நடைபெற்ற இந்த சண்டைக் காட்சி இதுவரை யாரும் எடுத்திராத காட்சி என்று கூறப்படுகிறது.
அந்த அனுபவம் குறித்து வெல்டன் பகிர்ந்துள்ளார். அதில் “ நாங்கள் 15 நிமிடங்களாக காத்திருந்தோம். இரண்டும் ஒன்றுகொன்று பார்த்தவாறு நின்றுக் கொண்டிருந்தன. நான் அப்போதே முடிவு செய்துவிட்டேன். ஏதோ பெரிய சம்பவம் நிகழப்போகிறதென என் கேமராக்களை தயாராக வைத்திருந்தேன். திடீரென எதிர்பாராத விதமாக சிறுத்தையை மலைப் பாம்பு விழுங்க முயற்சிக்கிறது.

பின் சிறுத்தையும் பதிலுக்கு தாக்க முயற்சிக்கிறது. கடுமையான சண்டைக்கு இறுதியில் சிறுத்தை மலைப்பாம்பின் தலையை கடித்து சண்டையில் வெற்றி பெற்று தன் உயிரை காப்பாற்றிகொண்டது. நான் இதுவரை உலகம் முழுவதும் பயணித்துள்ளேன். இப்படியொரு காட்சியை எங்கும் கண்டதில்லை. யாரும் இப்படியொரு காட்சியை எடுத்திருப்பார்களா என்பதும் தெரியவில்லை “ என்று கூறியுள்ளார்.
 
First published: November 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்