காலைக் கடனை முடிக்க சென்றவருக்கு நேர்ந்த கொடுமை... கழிவறையில் காத்திருந்த மலைப்பாம்பு (வீடியோ)

காலைக் கடனை முடிக்க சென்றவருக்கு நேர்ந்த கொடுமை... கழிவறையில் காத்திருந்த மலைப்பாம்பு (வீடியோ)

கழிவறையில் காத்திருந்த மலைப்பாம்பு

தாய்லாந்தில் காலைக்கடனை முடிக்க கழிவறை சென்ற நபருக்கு கழிவறையில் பாம்பு ஒன்று இருந்தது பேரதிர்ச்சியை அளித்துள்ளது.

 • Share this:
  தாய்லாந்து நாட்டின் சாமுத் பிரகான் மாகாணத்தைச் சேர்ந்த 45 வயதான சோமச்சாய், கடந்த மார்ச் 28 அன்று தனது கழிப்பறையில் அமர்ந்திருந்தபோது, ​​அவரது அடிப்பகுதியில் ஏதோ ஒன்று மேல் நோக்கி மோதியதாக உணர்ந்துள்ளார்.

  உடனே மேலே எழுந்து பார்த்த போது கழிப்பறை கிண்ணத்திலிருந்து ஒரு பாம்பின் தலையை பார்த்துள்ளார்.

  உடனே அவர் அதனை விரட்ட அதன் மீது கழிவறைக்குள் சோப்பு நுரையை ஊற்றமுயன்றுள்ளார், ஆனால் எந்த முயற்சியும் பலன் அளிக்காததால் உடனே அவசர சேவைக்கு அழைத்துள்ளார். சுமார் 8 அடி நீளம் பாம்பு இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். பாம்பினை பிடிக்க முயன்ற போது அது, கழிவறைக்குள் சென்று விட்டதாகவும், உடனே பாம்பை பிடிக்க வருமாறும் அவரச அழைப்பில் அவர் தெரிவித்துள்ளார்.  இது குறித்து டெய்லி மெயில் செய்தி நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ள அவர், நான் கழிவறைக்குள் சென்ற போது இன்று காலை ஒரு மலைப்பாம்பை பார்த்தேன். என் அடிப்பகுதியில், ஏதோ தள்ளப்படுவதை உணர்ந்தேன். அப்போதுதான் நான் கீழே பார்த்தேன், ஒரு பெரிய மலை பாம்பு இருந்தது.  அதன் தலையை கழிவறை கிண்ணத்தின் விளிம்பில் இருந்தது. உடனே அதிர்ச்சி அடைந்தேன். அவசர எண்ணுக்கு தொடர்பு கொண்டு நடந்ததை விவரித்தேன் என கூறியுள்ளார்.

  பின்னர் வந்த வனத்துறை அதிகாரிகள் பாம்பை பத்திரமாக மீட்டுள்ளனர். அதன் உடல்நிலையை பரிசோதித்த அதிகாரிகள்  அதனை காட்டுக்குள் விடுவதாக கூறியுள்ளனர்.  இது குறித்து பேசியுள்ள வனத்துறை அதிகாரிகள், இந்த பகுதி 'மலைப்பாம்புகள் ஆக்கிரமிப்புடன் இருப்பதால் வந்திருக்கலாம். இவ்வகை பாம்புகள் மக்களை கடிக்கும். நாங்கள் பாம்பினை பிடிக்க நேரும் போது அதனை பாதுகாப்பாக பிடிக்க வேண்டி இருந்தது.  பாம்பு கழிவறையில் இருப்பதை வீட்டின் உரிமையாளர் விரும்பவில்லை. அதனால் மிகவும் கவனமுடன் காத்திருந்து பாம்பு வெளியில் வரும்போது பிடித்தோம் என கூறியுள்ளார்.

     இதே போல் தாய்லாந்தில் காரின் பெட்ரோல் டேங்கில் மலை பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. க்ளோங் யாங் எனும் கிராமத்தில் விவசாயி ஒருவர் தனது காரை கரும்பு தோட்டம் ஒன்றின் அருகே நிறுத்திவிட்டு சென்றிருக்கிறார். திரும்பி வந்து பார்த்த போது மலைப்பாம்பு ஒன்று காரின் மேற்பகுதியில் மெதுவாக ஊர்ந்து சென்று உள்ளது.

      

  அதனை பார்த்த அவர் உடனடியாக கார் கதவுகளில் உள்ள கண்ணாடி ஜன்னல்களை மூடியுள்ளார். ஆனால் அந்த மலைப்பாம்பு காரின் பெட்ரோல் டேங்கிற்குள் புகுந்துகொண்டது. அதன்பிறகு நீண்ட நேரமாக போராடி மலைப்பாம்பை வெளியே எடுத்தனர்.
  Published by:Sankaravadivoo G
  First published: