தண்ணீர் குடிக்க வந்த மானை கவ்விப் பிடித்த மலைப்பாம்பு...! வைரல் வீடியோ

தண்ணீர் குடிக்க வந்த மானை கவ்விப் பிடித்த மலைப்பாம்பு...! வைரல் வீடியோ
News18
  • News18
  • Last Updated: November 26, 2019, 5:23 PM IST
  • Share this:
தண்ணீரில் நீண்ட நேரம் இரைக்காக குறி வைத்து காத்துக்கிடந்த மலைப்பாம்பு ஒன்று தண்ணீர் குடிக்க வந்த மான் ஒன்றை கவ்விப்பிடித்து இழுத்துச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

மஹாராஷ்டிராவின் சந்தா மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில், விலங்குகளை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த கேமராவில் சமீபத்தில் பதிவான காட்சிகளை, வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

வீடியோவில், இரைக்காக தண்ணீர் குட்டையில் நீண்ட நேரமாக ஒரு மலைப்பாம்பு காத்துக்கிடக்கிறது. மூன்று மான்கள் அங்கு தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத வகையில், மான் ஒன்றை மலைப்பாம்பு கவ்விப்பிடித்துள்ளது. பின்னர், மானை தண்ணீருக்குள் இழுத்துச் செல்கிறது.

பயத்தையும், ஆச்சரியத்தையும் ஒருசேர இந்த வீடியோ தருவதாக பலரும் கமெண்ட் செய்திருந்தனர்.

சமீபத்தில் கென்யாவின் சபாரி பூங்காவில் சிறுத்தையும், மலைப்பாம்பு ஒன்றும் சண்டையிட்ட வீடியோ வைரலாகியிருந்தது.

First published: November 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்