ஏஸ் ஷட்லரும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனையுமான பிவி சிந்து, பிரதமர் நரேந்திர மோடியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு பிரதமர் மோடியுடன் அமர்ந்து ஐஸ் கிரீம் சாப்பிட்ட அனுபவத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார். 2020 ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடைபெற்றது.
இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 126 வீரர்-வீராங்கனைகள் 18 விளையாட்டுகளில் பங்கேற்றனர். மேலும் வரலாற்றில் முதல் முறையாக அதிகபட்சமாக 7 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்தது. ஈட்டி எறிதலில்
நீரஜ் சோப்ரா தங்கம் பதக்கம் வென்று இந்தியாவை பெருமை படுத்தியுள்ளார். ஒலிம்பிக்கில் தடகளத்தில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சிறப்புமிக்க சாதனையை அவர் படைத்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, மல்யுத்த வீரர் ரவிகுமார் தகியா ஆகியோர் வெள்ளிப்பதக்கமும், பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து, குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா, மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் வெண்கல பதக்கமும் பெற்றனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் சாதித்து நாடு திரும்பிய இந்திய வீரர்-வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த தேனீர் விருந்து கொடுத்து கவுரவித்தார். மேலும், கடந்த 16ம் தேதி டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்-வீராங்கனைகளை பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்திற்கு அழைத்து சந்தித்தார்.
Also read... ’உலகம் கைவிட்டுவிட்டது’ ஆப்கன் சிறுமியின் கண்ணீர் வீடியோ!
இந்த நிலையில், பிரதமர் மோடியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பிவிசிந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். அதில், "நமது மாண்புமிகு பிரதமர் நரேந்திரமோடி-ஜியுடன் இறுதியாக ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி," என்று கேப்ஷன் செய்துள்ளார். சிந்து பிரதமர் மோடியுடன் ஐஸ்கிரீம் சாப்பிடுவதையும், டோக்கியோ மற்றும் ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் வென்றதை காண்பிக்கும் புகைப்படங்களையும் அந்த பதிவில் இணைத்துள்ளார்.
இந்த படங்களை ஆகஸ்ட் 16ம் தேதி அன்று பகிரப்பட்டது. இந்த பதிவு 50,300 லைக்குகளை மற்றும் பல ரியாக்ஷன்களையும் பெற்றுள்ளது. ஏராளமானோர் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி கமெண்ட்ஸ் செய்துள்ளனர். ஒலிம்பிக்கில் நாட்டை பெருமைப்படுத்திய சிந்துவை பலர் வாழ்த்திய அதே சமயத்தில், மற்றவர்கள் வரவிருக்கும் சர்வதேச நிகழ்வுகளில் தனது வெற்றிப் பாதையைத் தொடர வேண்டும் என்ற ஊக்கத்தையும் அளித்தனர். பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஒலிம்பிக்கில் 2 பதக்கம் பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.