ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

இந்த இமேஜில் மறைந்திருக்கும் 6 ஆங்கில வார்த்தைகளை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?

இந்த இமேஜில் மறைந்திருக்கும் 6 ஆங்கில வார்த்தைகளை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?

கண்டுபிடிங்க பா ர்க்கலாம்..

கண்டுபிடிங்க பா ர்க்கலாம்..

இதே போல படத்தை உற்று பார்த்து மீதமுள்ள 5 வார்த்தைகளை கண்டுபிடித்து விடுவீர்களா

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சோஷியல் மீடியாக்களில் ஆப்டிகல் இல்யூஷன்கள் மிகவும் பிரபலமானவையாக இருக்கின்றன. ஏனென்றால் இதில் மறைந்திருக்கும் புதிர்களை கண்டறிய கண்களையும், மூளையையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த வேண்டி இருக்கிறது.

  இதனால் சுவாரசியம் அதிகரிப்பதால் நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று கொண்டு அதை தீர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது நீங்கள் இங்கே பார்க்க போகும் ஆப்டிகல் இல்யூஷன் இமேஜில் சில ஆங்கில வார்த்தைகள் மறைந்திருக்கின்றன. ஆனால் இந்த வார்த்தைகளை பார்த்தவுடன் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. சற்று கடினம் தான்.

  கீழே நீங்கள் பார்க்கப் போகும் ஆப்டிகல் இல்யூஷன் இமேஜில் லிவிங் ரூமில் அமர்ந்து ஒரு குடும்பம் மும்முரமாக புத்தக வாசிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்த குடும்பம் அப்பா, அம்மா, மகன், மகள் என நால்வர் அடங்கியது. தம்பதி இருவரும் ஆளுக்கொரு சோஃபாவில் உட்கார்ந்து புத்தகம் வாசித்து கொண்டிருக்க இவர்களது மகன் அருகில் உள்ள மற்றொரு சோஃபாவில் ஹாயாக படுத்து கொண்டும், மகள் பெற்றோருக்கு எதிரே கீழே படுத்தபடியும் புத்தகம் வாசித்து கொண்டிருக்கின்றனர். இவர்களை தவிர நாய் மற்றும் பூனைக்குட்டி ஒன்றும் குறிப்பிட்ட லிவிங் ரூமில் இருப்பதையும் காணலாம். இந்த குடும்பம் இருக்கும் லிவிங் ரூம் இமேஜில் மொத்தம் 6 ஆங்கில வார்த்தைகள் மறைந்திருக்கின்றன. இதை நீங்கள் 20 வினாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும்.

  https://images.news18.com/ibnlive/uploads/2022/09/untitled-design-6-10-16627057533x2.png?impolicy=website&width=510&height=356

  மேலே உள்ள ஆப்டிகல் இமேஜை பார்த்தும் உங்களால் சரியான விடைகளை கண்டறிய முடியவில்லை என்றால் உங்களுக்காக ஒரு வார்த்தைக்கான குறிப்பை இங்கே தருகிறோம். இந்தப் படத்தில் பெண்மணி படிக்கும் புத்தகத்தின் அட்டைப் பக்கத்தில் O, R ஆகிய 2 எழுத்துக்கள் உள்ளன. இந்த பெண்ணின் தலைமுடி மற்றும் உடையில் S, T ஆகிய 2 எழுத்துக்களை பார்க்கலாம். பெண்மணியின் கால் வளைவில் Y என்ற எழுத்து இருக்கிறது. இவற்றை சேர்த்தால் STORY என்ற வார்த்தை உங்களுக்கு கிடைக்கும்.

  இதே போல படத்தை உற்று பார்த்து மீதமுள்ள 5 வார்த்தைகளை கண்டுபிடித்து விடுவீர்களா.! ரொம்ப கஷ்டம் என்று நீங்கள் நினைத்தால் மீதம் மறைந்திருக்கும் 5 வார்த்தைகள் என்ன என்பதை இங்கே உங்களுக்கு செல்கிறோம். கண்டுபிடிக்க முடிகிறதா என்று முயற்சித்து பாருங்கள். Book, Novel, Words, Page, Read இவை தான் நீங்கள் இப்போது கண்டுபிடிக்க வேண்டியவை. கீழ் படத்தை பார்த்து ஒரு ட்ரை கொடுங்கள்

  https://images.news18.com/ibnlive/uploads/2022/09/untitled-design-6-10-16627057533x2.png?impolicy=website&width=510&height=356

  இப்போதும் முடியவில்லை என்றால் விடைகள் இது தான்: லிவிங் ரூமில் அமர்ந்திருக்கும் அப்பாவிடம் Book என்ற வார்த்தையும், இவர் அமர்ந்திருக்கும் சோஃபாவில் Novel என்ற வார்த்தையும், செடியில் words என்ற வார்த்தையும், சிறுவனின் டிராயர் மற்றும் டீ ஷர்ட்டில் Page என்ற வார்த்தையும், நாயின் காது மற்றும் சிறுமியின் தலைமுடியை சேர்த்து பார்த்தால் Read என்ற வார்த்தையும் உங்களுக்கு தெரியும். கீழே மார்க் செய்யப்பட்டுள்ள படத்தை பார்த்து விடைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

  https://bankingadda.in/wp-content/uploads/2022/08/hidden-words-min-1.jpg

  இது போன்ற மூளை மற்றும் கண்களுக்கு வேலை கொடுக்கும் ஆப்டிகல் இல்யூஷ்ன்களுடன் வேறொரு பதிவில் உங்களை சந்திக்கிறோம்.

  link: https://www.news18.com/news/buzz/can-you-find-6-english-words-in-this-optical-illusion-youve-20-seconds-5921563.html

  Published by:Selvi M
  First published: