Home /News /trend /

ராமரைத் தொடர்ந்து வார்னரின் மகள்கள்.. இணையத்தில் வைரலாகும் புஷ்பா பட பாடல் வீடியோ

ராமரைத் தொடர்ந்து வார்னரின் மகள்கள்.. இணையத்தில் வைரலாகும் புஷ்பா பட பாடல் வீடியோ

வார்னரின் மகள்கள்

வார்னரின் மகள்கள்

Viral Video : அண்மையில் வெளியான புஷ்பா திரைப்பட பாடலுக்கு வார்னரின் மகள்கள் நடனமாடுவது வார்னரின் ரசிகர்களையும், தெலுங்கு திரைப்பட ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரின் மகள்கள், தெலுங்கு படமான புஷ்பா திரைப்படத்தில் இடம்பிடித்த சாமி சாமி பாடலுக்கு உற்சாகமாக நடனமாடியுள்ளனர்.

    தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் முரட்டு ரசிகரான டேவிட் வார்னர், அல்லு அர்ஜூன் நடிக்கும் படங்களின் காட்சிகளையும், பாடல்களையும் அப்படியே நடித்துக்காட்டி பலரின் பாராட்டுகளை பெற்றவராவார். இந்நிலையில் அண்மையில் வெளியான புஷ்பா திரைப்பட பாடலுக்கு வார்னர் நடனமாடினார்.



    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் நிலையில் அவரின் மகள்கள் அதேபடத்தில் இடம்பிடித்துள்ள மற்றொரு பாடலுக்கு நடனமாடுவது வார்னரின் ரசிகர்களையும், தெலுங்கு திரைப்பட ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.







    அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான படம் 'புஷ்பா'. இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் செம ஹிட். குறிப்பாக 'ஓ சொல்றியா மாமா..' பாடல் அனைத்து மொழிகளிலும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது.

    சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், வெளியான இத்திரைப்படத்தின் உலகளவிலான தியேட்டர் வசூல் 300 கோடியை கடந்துவிட்டதாம்.

    'சாமி..சாமி' பாடலுக்கு ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜுன் அசத்தலாக நடனமாடியுள்ளனர். அண்மையில் ராஷ்மிகா தன் இஸ்டாவில் வெளியிட்டுள்ள சாமி சாமி ரீல்ஸ் வீடியோவுக்கு லைக்குகள் குவிந்தன.



    விஜய் டிவி-யில் பிரபல காமெடி நடிகரான ராமர் `சாமி சாமி' பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பலரின் கவனம் பெற்றது குறிப்பிடத் தக்கது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Actress Rashmika Mandanna, David Warner

    அடுத்த செய்தி