• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • "சாணம், கோமியம் உடலையும் மனதையும் தூய்மைப்படுத்தும்".. மாட்டுச்சாணம் சாப்பிட்ட படி வீடியோ வெளியிட்ட மருத்துவர்..!

"சாணம், கோமியம் உடலையும் மனதையும் தூய்மைப்படுத்தும்".. மாட்டுச்சாணம் சாப்பிட்ட படி வீடியோ வெளியிட்ட மருத்துவர்..!

மாட்டுச்சாணம் சாப்பிட்ட படி வீடியோ வெளியிட்ட மருத்துவர்

மாட்டுச்சாணம் சாப்பிட்ட படி வீடியோ வெளியிட்ட மருத்துவர்

ஹரியானவை சேர்த்த மருத்துவர் மனோஜ் மிட்டல் என்ற அந்த நபர் பசுவின் சாணத்தை சாப்பிடுவது போன்ற அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

  • Share this:
கடந்த வருடம் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த நிலையில், கொரோனாவுக்கு தடுப்பு மருந்து என்ற பல மூடநம்பிக்கைகளும் வட மாநிலங்களில் பரவியிருந்தன. அதில் மிக வைரலாக பேசப்பட்ட சம்பவம் தான் மாட்டுச்சாணம். மாட்டுச்சாணம் மற்றும் கோமியம் ஆகியவை கொரோனா பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாக்கும் என்றுக் கூறி பலர் அதனை சாப்பிட செய்தனர். பலர் சாணத்தை உடலில் பூசிக்கொண்டனர்.

இந்த சம்பவங்கள் மிக வைரலானது. ஏன், சில மாநில தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கூட இதனை ஆதரித்த சம்பவங்களும் நாட்டில் நிகழ்ந்தன. ஆனால் உண்மையில் மாட்டுச்சாணமும், கோமியமும் ஒருவரை நோய் பாதிப்பில் இருந்து தடுக்கிறது என்பதற்கான அறிவியல் ஆதாரம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனை நம்ப வேண்டாம் என பல மருத்துவர்கள் அறிவுரைகூறி வந்தனர். ஆனால், இங்கு ஒரு மருத்துவரே செய்த காரியம் இணையவாசிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானவை சேர்த்த மருத்துவர் மனோஜ் மிட்டல் என்ற அந்த நபர் பசுவின் சாணத்தை சாப்பிடுவது போன்ற அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், மிட்டல் நேரடியாக பசுக்கள் கட்டிவைக்கப்பட்டிருக்கும் தொழுவத்திற்கு சென்று தரையில் இருந்த பசுவின் சாணத்தை எடுத்து சாப்பிட்டபடி பேச்சு கொடுக்கிறார். சாணத்தை சாப்பிடுவதாலும் , ​​பசுவின் சிறுநீரைக் குடிப்பதாலும் ஏற்படும் நன்மைகளை பற்றி மருத்துவர் மிட்டல் அந்த வீடியோவில் விளக்குகிறார்.

அதில் அவர் கூறியதாவது, " இந்த இரண்டு செயல்களும் பல கடுமையான நோய்களைத் தடுக்க உதவுகின்றன. மேலும், சுகபிரசவத்திற்கு பெண்கள் பசுவின் சாணத்தை உண்ண வேண்டும் என்றும் சிசேரியனை தேர்வு செய்ய வேண்டியதில்லை" என்றும் அவர் விளக்கினார். மேலும் பேசிய அவர், “பசுவிடமிருந்து கிடைக்கும் பஞ்சகவ்யாவின் ஒவ்வொரு பாகமும் மனித குலத்திற்கு மிகவும் மதிப்பு வாய்ந்தது. பாருங்கள், பசுவின் சாணத்தை சாப்பிட்டால் நம் உடலும் மனமும் தூய்மையாகும். நமது ஆன்மா தூய்மையாகிறது. அது நம் உடலுக்குள் நுழைந்தவுடன், அது நம் உடலை சுத்தப்படுத்துகிறது. மேலும் உயர் ரத்த அழுத்தத்தை சரி செய்கிறது" என்று தெரிவித்தார்.இந்த வீடியோ வைரலாகியதோடு, பசுவின் சாணம் சாப்பிடுவது குறித்த டாக்டர் மிட்டலின் அறிவுரை பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பலர் ட்விட்டரில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்ட மக்களுக்கு பல மருத்துவர்கள் அறிவுரைகளை வழங்கி வந்தனர். மாட்டுச் சாணத்தைப் பயன்படுத்துவதால், Mucormycosis அல்லது Black fungus எனப்படும் பூஞ்சை தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

Also read... சில நாடுகளில் இடது பக்க போக்குவரத்து விதி பின்பற்றப்படுவதற்கான காரணங்கள்!

பிரபல மருத்துவரும் அகமதாபாத் மருத்துவ சங்கத்தின் உறுப்பினருமான டாக்டர் வசந்த் படேல் இதுகுறித்து கூறுகையில், நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்காக பசுவின் சாணம் மற்றும் மாட்டு மூத்திரத்தில் குளிப்பது போன்று சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோக்கள் தவறானவை. மாட்டுச் சாணமும், மாட்டு மூத்திரமும் கொரோனா வைரஸைக் குணப்படுத்த உதவும் என்ற தவறான கருத்து உள்ளது. உண்மையில், மக்கள் மியூகோர்மைகோசிஸ் என்ற தொற்று நோயை வம்படியாக வாங்கிக்கொள்வதற்கு இது சமம் என்று படேல் கூறினார்.

எனவே "முகக்கவசங்கள், கை சுத்திகரிப்பான்கள் மற்றும் சமூக தூரத்தை பராமரிப்பது மட்டுமே கொரோனா வைரஸை தடுக்க ஒரே வழி" என்று மருத்துவர் அறிவுறுத்தியிருந்தார். இதுபோன்ற ஆபத்தான மூடநம்பிக்கையில் விழ வேண்டாம் என்று மக்களைக் கேட்டுக் கொண்டார். ஆனால் தற்போது ஹரியானா மருத்துவரின் செயல் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: