ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

பெண்களுக்கு எதிராக அநாகரீகமான வார்த்தைகள் - முகம் சுழிக்க வைத்த விளம்பரம்

பெண்களுக்கு எதிராக அநாகரீகமான வார்த்தைகள் - முகம் சுழிக்க வைத்த விளம்பரம்

அழகிப் போட்டி

அழகிப் போட்டி

Punjabi Beauty Contest | அழகிப் போட்டியில் பங்கேற்குமாறு பஞ்சாப் மாநிலத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில் அறிவிக்கப்பட்ட சன்மானம் என்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Punjab, India

விளையாட்டு போட்டி அல்லது திறன் சார்ந்த போட்டிகளில் பங்கேற்க அழைப்பு விடுத்து ஊரெங்கும் போஸ்டர் ஒட்டுவது வழக்கமான விஷயம் தான். அந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு இவ்வளவு ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் அல்லது தங்க நாணயம் பரிசளிக்கப்படும் அல்லது சுழற்கோப்பை வழங்கப்படும் என்றுதான் குறிப்பிட்டிருப்பார்கள்.

ஆனால், அழகிப் போட்டியில் பங்கேற்குமாறு பஞ்சாப் மாநிலத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில் அறிவிக்கப்பட்ட சன்மானம் என்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம், இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அழகி, கனடாவாழ் இந்தியரை திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது.

அக்டோபர் 23ம் தேதி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் போட்டி குறித்த விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவிட்டன. இதுகுறித்து பஞ்சாப் மாநில காவல்துறை டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், “பதிண்டா நகரத்தின் பல்வேறு இடங்களில் ஆட்சேபனைக்குரிய வகையிலான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. பெண்களுக்கு எதிராக அநாகரீகமான வார்த்தைகள் இடம்பெற்றுள்ள அந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை இந்த விவகாரத்தில் துரிதமாக செயல்பட்டு, தொடர்புடைய நபர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், சட்டத்தை மீறும் செயல்களை எந்த காரணத்தைக் கொண்டும் காவல்துறை பொறுத்துக் கொள்ளாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : கேன்சரால் பாதிக்கப்பட்ட தங்கையை நெகிழ வைத்த அண்ணன்! கலங்க வைக்கும் வீடியோ!

விளம்பரம் குறித்து நெட்டிசன்கள் விமர்சனம் :

இதற்கிடையே, விளம்பரத்திற்கு நெட்டிசன்களும் சமூக வலைதளங்கள் மூலமாக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பயனாளர் ஒருவர் எழுதியுள்ள கமெண்டில், “கனடாவாழ் இந்தியர் ஒருவர் அழகான பெண்ணை திருமணம் செய்ய விரும்பியிருக்கிறார். இதனால், பஞ்சாப்பில் அவர் சுயம்வரம் நடத்திக் கொண்டிருக்கிறார்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த விளம்பரம் பெண்களின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக மற்றொரு பயனாளர் கூறியுள்ளார். விளம்பரம் குறித்து நையாண்டி செய்துள்ள பயனாளர் ஒருவர், “போட்டியில் வெற்றி பெற்றால் கனடாவில் செட்டில் ஆகலாம். தோல்வி அடையும் பெண்கள் சண்டீகரில் தான் வாழ்ந்தாக வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த தவறை செய்த நபர் கனடாவில் இருந்தாலும் பஞ்சாப் மாநில காவல்துறை அவரை தேடிப் பிடித்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Also Read : பாறைகளுக்கு இடையில் மறைந்திருக்கும் சிறுமி.! 13 வினாடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா.?

சர்ச்சை ஆகும் திருமண விளம்பரங்கள்:

மணமகன் தேவை அல்லது மணமகள் தேவை என்று வெளியாகும் விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளில் சர்ச்சைக்குரிய விஷயங்கள் அவ்வபோது இடம்பெறுகின்றன. அண்மையில் வைரலான விளம்பரம் ஒன்றில் ஐடி துறை பொறியாளர்கள் தயவுசெய்து தொடர்பு கொள்ள வேண்டாம் என்று மணமகள் வீட்டார் குறிப்பிட்டிருந்தனர்.

அதற்கு பதிலடி கொடுத்த நெட்டிசன்கள், ஐடி துறையில் பணியாற்றுபவர்களில் யாரும் மணப்பெண் கிடைக்காமல் திண்டாடும் நிலைமையில் இல்லை என்று குறிப்பிட்டிருந்தனர்.

Published by:Selvi M
First published:

Tags: Punjab, Punjab police, Tamil News, Trending