• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • 'வாழ்ந்தால் இம்மனிதரைப் போல் வாழ்தல் வேண்டும்' - வைரலாகும் புனித் ராஜ்குமாரின் அழகிய தருணங்கள்

'வாழ்ந்தால் இம்மனிதரைப் போல் வாழ்தல் வேண்டும்' - வைரலாகும் புனித் ராஜ்குமாரின் அழகிய தருணங்கள்

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார்

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார்

puneeth rajkumar : கன்னட திரை உலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  • Share this:
    'வாழ்ந்தால் இம்மனிதரைப் போல் வாழ்தல் வேண்டும்' என கன்னட திரை உலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாக திகழ்பவர் புனித் ராஜ்குமார். சென்னையில் பிறந்தவரான இவருக்கு வயது 46. ரசிகர்களால் பவர் ஸ்டார் என அழைக்கப்படும் புனித் ராஜ்குமார், திரையுலக ஜாம்பவான்களான ராஜ்குமார், பர்வதம்மா ஆகியோரின் மகனாவார். திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான புனித் ராஜ்குமார் 29ம் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். 1985ம் ஆண்டு பெட்டடா ஹூவு என்ற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதை வென்றார். மேலும் சலிசுவா மொதகழு, எர்ரட நக்ஷத்ரகழு போன்ற படங்களுக்காக கர்நாடக மாநிலத்தின் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதை இரண்டு முறை பெற்றிருக்கிறார்.



    2002ம் ஆண்டு அப்பு என்ற படத்தில் முதன் முறையாக ஹீரோவாக அறிமுகமானார். அப்போதிலிருந்து அவரின் ரசிகர்கள் அவரை அப்பு என செல்லமாக அழைத்து வருகின்றனர். அபி, வீர கன்னடிகா, அஜய், அரசு, ராம், ஹுதுகரு, அஞ்சனி புத்ரா போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றிருக்கிறார். இவரின் நடிப்பில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் யுவரத்னா என்ற படம் ரீலீஸ் ஆகி இருந்தது.



    1999ம் ஆண்டு அஷ்வினி ரேவந்த் என்பவரை திருமணம் செய்த புனித் ராஜ்குமாருக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். புனித் ரஜ்குமாரின் குடும்பம் முழுவதுமே திரைத்துறையில் தான் உள்ளனர். சிவ ராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார் என அவரின் இரண்டு சகோதரர்களும் நடிகர்களாக உள்ளனர். மேலும் இவரின் சகோதரரின் இரு மகன்களான வினய் மற்றும் யுவா ஆகியோரும் நடிகர்களாக உள்ளனர்.



    இவர்கள் குடும்பத்தில் புனித் ராஜ்குமாருடன் சேர்த்து 12 பேர் திரைத்துறையில் நடிகர்களாகவும், இயக்குநர்களாகவும், நடிகையாகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. நடிகர் புனித் ராஜ்குமாருக்கு திடீரென மரடைப்பு ஏற்பட்டதால் பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



    இதனையடுத்து கவலைக்கிடமாக இருக்கும் தகவல் அறிந்து ரசிகர்கள், சக திரையுலகினர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். அவர் நலமடைந்து திரும்பிவர வேண்டும் என பிரார்த்தனை செய்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக மருத்துவமனை அறிவித்தது.





    நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவு செய்தி அறிந்து ரசிகர்களும், கன்னட, தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய திரைத்துறை பிரபலங்கள் பலரும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



    தற்போது நடிகர் புனிதராஜ் குமார் குறித்த வீடியோக்கள் பல இணையத்தில் வைரலாகி வருகின்றது.





    அவர் தனது ரசிகர்களிடம் நடந்து கொண்ட விதம் , ரசிகர்களை சந்தித்த விதம் , அவரது கள்ளம் கபடமில்லா சிறப்பு , குழந்தைகளிடம் கொஞ்சி விளையாடிய செயல் என இணையத்தில் அவர் குறித்த வீடியோக்கள் வைரலாகி வருகின்றது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: