கொரோனா அச்சத்திலும் குதூகலம்: தங்கத்தில் மாஸ்க் அணிந்து பந்தா காட்டிய நபர்... விலை எவ்வளவு தெரியுமா?

புனேவை சேர்ந்த சங்கர் குராடே என்பவர் தங்கத்தில் மாஸ்க் அணிந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

கொரோனா அச்சத்திலும் குதூகலம்: தங்கத்தில் மாஸ்க் அணிந்து பந்தா காட்டிய நபர்... விலை எவ்வளவு தெரியுமா?
சங்கர் குராடே
  • Share this:
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் வைரஸால் ஏற்படும் உயிரிழப்ப நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அத்தியவாசிய தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டுமென்றும், மாஸ்க் கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அனைவரும் மாஸ்க் அணிந்து வருவதால் வித விதமான மாஸ்கள் விற்பனைக்கு வந்துள்ளது. நம் அணியும் டிரெஸ்க்கு ஏற்றவாறு, மாஸ்க் அணிபவர்களை புகைப்டம் எடுத்து அவர்களின் தோற்றத்திற்கு ஏற்றவாறு மாஸ்க் என பல ரகம் மாஸ்க் விற்பனைக்கு வந்துள்ளது.

ஆனால் இதையெல்லாம் மிஞ்சி தங்கத்தில் செய்யப்பட்ட மாஸ்கை அணிந்துள்ளார், புனேவை சேர்ந்த சங்கர் குராடே. இவர் அணிந்துள்ள தங்க மாஸ்க் ரூ.2.89 லட்சம் மதிப்புடையது. இந்த தங்க மாஸ்கில் சுவாசிப்பதற்காக 2 சிறிய துளைகள் போடப்பட்டுள்ளது.


தங்க மாஸ்கை அணிந்து கொண்டு சங்கர் குராடே ஏ.என்.ஐ-க்கு அளித்த பேட்டியில், “தங்க மாஸ்க் எவ்வளவு பாதுகாப்பானது என்று தெரியவில்லை. மாஸ்கில் சிறிய துளைகள் இருப்பதால் சுவாசிப்பதற்கு எந்த சிரமும் இல்லை“ என்றுள்ளார்.

தங்கத்தில் மாஸ்க் மட்டுமல்ல அவரது விரல்கள், கழுத்து, கைகள் என உடல் முழுவதும் தங்கம் ஜொலிக்கிறது. தங்க மனிதனாக காட்சியளிக்கும் சங்கர் மாஸ்க் தங்கத்தில் அணிந்தது தான் ஹைலைட்டாக உள்ளது. தங்க மாஸ்க் அணிந்த சங்கரின் புகைப்படம் இணையத்தில் வைரலானதை அடுத்து கேலியாக பலர் தங்களது கருத்து தெரிவித்து வருகின்றனர்.
First published: July 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading