கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய சகோதரியை டான்ஸ் ஆடி வரவேற்ற இளம்பெண் - வீடியோ

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய சகோதரியை இளம்பெண் ஒருவர் டான்ஸ் ஆடி வரவேற்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய சகோதரியை டான்ஸ் ஆடி வரவேற்ற இளம்பெண் - வீடியோ
வீடியோ காட்சிகள்
  • Share this:
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்தை கடந்துள்ளது.

இந்தியாவில் அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 3,10,455 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாநிலத்தில் மும்பைக்கு அடுத்தப்படியாக புனேவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் கொரோனாவிலிருந்து மீண்டு வந்த தனது சகோதரியை சலோனி சத்புட் என்ற 22 வயது இளம்பெண் டான்ஸ் ஆடி வரவேற்றுள்ளார். சலோனியின் வீட்டிலிருக்கும் 5 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யபப்ட்டுள்ளது. இதில் சலோனிக்கு மட்டும் கொரோனா நெகடிவ் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சலோனியின் குடும்பத்தினர் 5 பேரும் குணமடைந்துள்ளனர். சலோனியின் சகோதாரி சத்புட் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அவரை வரவேற்கும் விதமாக சலோனி வீதியில் டான்ஸ் ஆடினார். அவரது அவரது சகோதாரியும் அவருடன் இணைந்து டான்ஸ் ஆடுவார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள புனேவில் இளம் பெண்ணின் உற்சாக நடனம் பலரிடம் இருந்து பாராட்டுகளை பெற்றுள்ளது.
First published: July 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading