விஷால் பட பாணியில் காரில் வந்த மணப்பெண்... அடுத்து நடந்த ட்விஸ்ட்?

வைரல் வீடியோ

புனேவில் மணப்பெண் ஒருவர் காரின் முன்பக்கம் அமர்ந்தபடி திருமணத்திற்கு வருகை தந்துள்ளார்.

 • Share this:
  திருமணத்திற்கு மணமக்கள் வித்தியாசமான முறையில் என்ட்ரி கொடுப்பதை தற்போதைய டிரெண்டாக வைத்துள்ளனர். எலிகாப்டரில் வந்து இறங்குவது, பறக்கும் விமானத்தில் திருமணம் செய்வது என புதுப்புதுசாக யோசிக்கின்றனர். அதுப்போன்று மணமகள் ஒருவர் வித்தியாசமான என்ட்ரி கொடுக்க முயற்சித்து சிக்கலில் மாட்டிக் கொண்டார்.

  ஆம்பள திரைப்படத்தில் நடிகர் விஷால் காரின் முன்பக்கம் அமர்ந்தவாறு ஒரு மாஸ் என்ட்ரி கொடுத்து அசத்துவார். இதெல்லாம் சாத்தியமா என்ற கேள்வியெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் அந்த காட்சி ரசிக்கும்படி படமாக்கப்பட்டிருக்கும். இந்த காட்சியில் வருவது போன்றே புனேவில் மணப்பெண் ஒருவர் காரின் முன்பக்கம் அமர்ந்தபடி திருமணத்திற்கு வருகை தந்துள்ளார்.  புனேவில் காரில் முன்பக்கம் அமர்ந்தவாறு மணப்பெண் ஒருவர் வருகை தர கேமிரா மேன் அதை வீடியோ எடுக்கும் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலானது. அந்த வழியில் பைக்கில் சென்ற ஒருவர் இந்த வீடியோவை தனது மொபைலில் எடுத்துள்ளார்.

  Also Read : மனைவியின் செயலால் அதிர்ச்சியடைந்த கணவன் - வைரல் வீடியோ

  இந்த வீடியோ இணையத்தில் வைரலாக இதை பார்த்த போக்குவரத்து காவல்துறையினர் மோட்டர் வாகன சட்டத்தின் விதிமீறல் என்று நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் அந்த பெண் பொது இடத்தில் மாஸ்க் அணியாமல் இருந்ததால் கோவிட் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இந்த வீடியோ புன - சாஸ்வத் வழியல் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மணமகள் மற்றும் இந்த வீடியோவை எடுத்த கேமிரா மேன் மீது . மோட்டார் வாகனச் சட்டத்தின் விதிகள் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம், பேரிடர் மேலாண்மைச் சட்டம், மகாராஷ்டிரா கோவிட் ஒழுங்குமுறைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: