Home /News /trend /

சுரங்கப்பாதை நீரில் சிக்கிய பள்ளி பேருந்து... குழந்தைகளை விரைந்து மீட்ட மக்கள்… குவியும் பாராட்டுகள்!

சுரங்கப்பாதை நீரில் சிக்கிய பள்ளி பேருந்து... குழந்தைகளை விரைந்து மீட்ட மக்கள்… குவியும் பாராட்டுகள்!

தெலங்கானா சுரங்கத்தில் சிக்கிய பேருந்து

தெலங்கானா சுரங்கத்தில் சிக்கிய பேருந்து

Viral Video : தெலங்கானா சுரங்கப்பாதை நீருக்குள் சிக்கிய பள்ளி பேருந்தில் இருந்த குழந்தைகளை வெள்ளத்தில் இறங்கி மீட்ட மக்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மழை வெள்ளம் என்று வரும் போதெல்லாம் மக்களிடம் மிஞ்சி இருக்கும் மனிதத்தை தெரிந்து கொள்ள முடிகிறது. சாதாரணமாக யாருக்கு என்ன ஆனால் எனக்கென்ன என்று போகும் பலர். இந்த மாதிரியான நேரங்களில் களத்தில் சட்டென்று குதித்து விடுகின்றனர்.அப்படி ஒரு சம்பவம் தான் தெலுங்கானாவில் நிகழ்ந்துள்ளது.

வானிலை மாற்றம் காரணமாக தெலங்கானாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல சுரங்கபாதைகள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இந்த நிலையில் அங்குள்ள மஹ்பூப் நகரில் பள்ளிப்பேருந்து ஒன்று குழந்தைகளை ஏற்றி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது.

பாகுபலி சமோசா… 30 நிமிடத்தில் சாப்பிட்டு முடித்தால் ₹50,000 பரிசு..!

அப்போது கொடூரூர்-மச்சனப்பள்ளி என்ற பகுதியின் அருகே ரயில் பாலத்தின் கீழே உள்ள சுரங்க பாதையில் அந்த பேருந்து செல்ல முயன்றுள்ளது. தண்ணீர் அதிகம் இருந்ததால் ஓட்டுநர் முதலில் தயங்கியுள்ளர்.

ஆனால் சென்று விடலாம் என்ற நம்பிக்கையில் சென்றுள்ளார். ஆனால் சுரங்கத்தில் நீரின் அளவு அதிகமாக இருந்ததால் சிறிது நேரத்தில் தண்ணீருக்குள் வண்டி மூழ்க ஆரம்பித்துவிட்டது.



இதனால் அச்சமடைந்த குழந்தைகள் அலற ஆரம்பித்து விட்டனர். அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த மக்கள் விரைந்து தண்ணீரில் இறங்கியுள்ளனர்.மீட்பு பணியில் இறங்கிய மக்கள், பேருந்தில் இருந்த குழந்தைகளை ஒவ்வொருவராக பேருந்தை விட்டு வெளியில் தூக்கி வந்துள்ளனர். அதன் பிறகு பேருந்தையும் சுரங்க பாதையில் இருந்து வெளியேற்றியுள்ளனர். இதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டுள்ளது.

மக்களே இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டது பெரிதும் பேசப்படுகிறது.இந்த வீடியோ இணையத்தில் பரவி பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Flood, Telangana

அடுத்த செய்தி