நம் மூதாதையர்கள் பயன்படுத்திய ரயில் அடுக்கு பாத்திரம்... இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

நம் மூதாதையர்கள் பயன்படுத்திய இந்தப் பாத்திரத்தின் பெயர் ரயில் அடுக்கு. இந்த பாத்திரத்தை திறந்து பார்த்தோமானால் ஆச்சர்யத்தில் உறைந்து போவீர்கள்.

நம் மூதாதையர்கள் பயன்படுத்திய ரயில் அடுக்கு பாத்திரம்... இணையத்தில் வைரலாகும் வீடியோ..!
நம் மூதாதையர்கள் பயன்படுத்திய ரயில் அடுக்கு பாத்திரம்
  • Share this:
ஒரு குடும்பமே இந்த பாத்திரங்களை வைத்து தினசரி சமையல் செய்யலாம் என அந்த காலத்தில் வடிவமைக்கப்பட்ட யாரும் பார்த்திராத ரயில் அடுக்கு பாத்திரம் வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

நம் மூதாதையர்கள் பயன்படுத்திய இந்தப் பாத்திரத்தின் பெயர் ரயில் அடுக்கு. இந்த பாத்திரத்தை திறந்து பார்த்தோமானால் முதலில் ஏதாவது காய் செய்வதற்கு இரண்டு அகலமான பாத்திரம் உள்ளது. பிறகு சிப்பல் என அழைக்க கூடிய சாதம் வடிக்க ஒன்று உள்ளது.

பிறகு பொரியல், வெங்காயம் தாளிக்க பயன்படுத்தும் இலுப்பை சட்டி, காபி ஆத்த பயன்படுத்தும் டபரா , தண்ணீர் குடிக்க செம்பு, கூட்டு வைக்க ஒரு பாத்திரம், குழம்பு வைக்க ஒரு பாத்திரம், மேலும் இரு சிறிய பாத்திரங்கள், இறுதியாக மிக பெரிய தவளை பானை இவை அனைத்தும் ஒரு பாத்திரத்தில் வைக்கப்பட்டுள்ளது.


இந்த வீடியோ இணையத்தில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

First published: May 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading