Home /News /trend /

இலங்கை அதிபர் வீட்டில் WWE விளையாடிய போராட்டக்காரர்கள் - வைரலாகும் வீடியோ

இலங்கை அதிபர் வீட்டில் WWE விளையாடிய போராட்டக்காரர்கள் - வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் வீட்டை அடித்து நொறுக்கியதோடு, வீட்டிற்குள் புகுந்த போராட்டக்காரர்கள், அங்குள்ள நீச்சல் குளத்தை ஆக்கிரமித்து குளித்து குத்தாட்டம் போட்டனர்.

    இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், அங்கிருந்த நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்வது தொடங்கி அவரது பெட்ரூமில் குத்துச்சண்டை போடுவது போன்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகிவருகிறது. இதுவரை இந்த வீடியோ இணையத்தில் 982. 8 K வியூஸ்களைப்பெற்றுள்ளது.

    இலங்கையில் இதுவரை இல்லாத அளவிற்கு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அத்தியாவசிய தேவைகளை கூட நிறைவேற்றி கொள்ளாமல் மக்கள் தவித்து வந்த நிலையில் தான், இதற்கு காரணமாக பிரதமர் ராஜபக்சே மற்றும் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என கடந்த ஏப்ரல் 9ம் தேதி முதல் மக்கள் போராட்டத்தைத் தொடங்கினர். இதனால் இலங்கை முழுவதும் வன்முறை வெடித்த நிலையில், தனது பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார்.

    பின்னர் இலங்கையில் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றுக் கொண்டார். இருந்தப்போதும் இலங்கையில் பொருளாதார நெருக்கடியிலிருந்து இன்னமும் மீள முடியவில்லை. இந்நிலையில் தான், இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேயும் தனது பதவியை விட்டு செல்ல வேண்டும் என்று கொழும்புவில் ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சியினர், மாணவ அமைப்பினர்,தொழிற்சங்க அமைப்புகள், கிரிக்கெட் வீரர்கள் என அனைவரும் போராட்டத்தை தீவிரப்படுத்தி வந்தனர்.

    Also Read : போட்டிக்கு நீங்களும் வரலாம்..! 8 கிலோ சமோசாவை 30 நிமிடத்தில் சாப்பிட்டால் ரூ.51,000 பரிசு

    இதோடு ஆயிரக்கணக்கான மக்கள் இலங்கை அதிபர் மாளிகை முன்பாக குவிந்து போராட்டம் நடத்தியதோடு அதிபர் வீட்டிற்குள் புகுந்துவிட்டனர். இதனையடுத்து அதிபர் கோத்தபய குடும்பத்துடன் தப்பிச்சென்ற நிலையில் தான், அவரது வீட்டிற்குள் நுழைந்ததோடு அங்கிருந்த பொருள்களையெல்லாம் எடுத்து சென்றனர். இதோடு மட்டுமில்லாமல் அதிபர் வீட்டை அல்லோலப்படுத்திவிட்டனர் போராட்டக்காரர்கள்.. இவர்கள் செய்த விஷயங்கள் தான் தற்போது சோசியல் மீடியாவிலும் வைரலாகி வருகிறது. அப்படி என்ன செய்தார்கள் தெரியுமா?



    அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் வீட்டை அடித்து நொறுக்கியதோடு, வீட்டிற்குள் புகுந்த போராட்டக்காரர்கள், அங்குள்ள நீச்சல் குளத்தை ஆக்கிரமித்து குளித்து குத்தாட்டம் போட்டனர். மேலும் கோத்தபய வின் உடற்பயிற்சி கூடத்தில் உள்ள அனைத்து உபகரணங்களையும் பயன்படுத்தும் வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைப்பார்த்த நெட்டிசன்கள், இலங்கை மக்கள் அதிபரின் வீட்டில் குதூகலமாக இருக்கிறார்கள் எனவும் என்ஜாய் பண்ணுங்கள் என்று டிவிட் செய்து வருகின்றனர்.



    இதோடு அதிபரின் படுக்கையறைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், அங்கு WWEவில் வருவது போன்று சண்டையிட்டு பெட்டில் உருண்டு புரள்வது போன்ற வீடியோக்கள் இணையத்தில் பதிவானது. அந்த வீடியோவில், WWE வில் வர்ணனையுடன் எப்படி மல்யுத்தம் செய்வார்களோ? அவ்வாறு சில போராட்டக்காரர்கள் மேற்கொண்டனர். மற்றவர்கள் சுற்றி நின்று சிரிப்பது போன்ற காட்சிகள் அனைத்தும் இடம் பெற்றிருந்தனர். இந்த வீடியோவை இணையத்தில் பார்த்த நெட்டிசன்கள், என்னடா? இப்படியெல்லாம் பண்ணிறீங்கள். எனவும் இலங்கையில் நடிக்கும் வேடிக்கையான நிகழ்வுகளில் இது ஒன்று என ட்விட் செய்துவருவது சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. இதுவரை இந்த வீடியோ இணையத்தில் 982. 8 K வியூஸ்களைப்பெற்றுள்ளது.

    இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை மீட்டெடுக்க ஆளும் அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நேரத்தில் தான் போராட்டக்காரர்கள் இந்த அளவிற்கு வன்முறையான மனநிலையில் உள்ளனர். எனவே இலங்கை பொருளாதாரத்தை மீட்டெடுக்க முயற்சிகளும் எடுக்க வேண்டும் என கோரிக்கைகளும் வலுத்துவருகிறது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Trends, Viral

    அடுத்த செய்தி